Iceland, volcano erupts in Reykjavik after small earthquakes | ஐஸ்லாந்தில் நிலநடுக்கம் காரணமாக வெடித்த எரிமலை: புகை மண்டலமான பகுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ரெய்க்யவிக்: கடந்த சில தினங்களாக ஐஸ்லாந்தில் ஏற்பட்டு வந்த நிலநடுக்கம் காரணமாக, எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டது. நெருப்புக் குழம்பு வெளியேறியதால் புகை மண்டலமாக காட்சியளித்தது.

வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தின் தலைநகரமான ரெய்க்யவிக்கை சுற்றியுள்ள பகுதிகளில், சில நாட்களுக்கு முன், 2 ஆயிரத்து 200 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தகவல் தெரிவித்து இருந்தது. எரிமலை எப்பொழுது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக ஐஸ்லாந்தில் ஏற்பட்டு வந்த நிலநடுக்கம் காரணமாக இன்று(ஜூலை 11) தலைநகர் ரெய்க்ஜாவிக்கில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டது. நெருப்புக் குழம்பு வெளியேறியதால் புகை மண்டலமாக காட்சியளித்தது.

கடந்த 2021ம் ஆண்டு மற்றும் 2022ம் ஆண்டு ரெய்க்ஜாவிக்கில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை அருகே எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறாக ஒடியது குறிப்பிடத்தக்கது. ஐஸ்லாந்தில் 30க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.