ஷர்மிளாவுக்கு கார் வாங்கிக் கொடுத்த நடிகர் கமல்ஹாசனிடம் திமுகவின் மகளிர் உரிமை தொகை குறித்து பேசியுள்ளார் நடிகை கஸ்தூரி.
கோவை ஷர்மிளாகோவை மாவட்டத்தின் முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா. இவர் கோவை மாவட்டத்தில் இயங்கும் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவரது காரில் திமுக எம்பி கனிமொழி பயணம் செய்தார். இதனை தொடர்ந்து ஷர்மிளாவின் வேலை பறிபோனது.
கமல் கொடுத்த பரிசுஇதனால் ஹாட் டாப்பிக் ஆனார் ஷர்மிளா. இதையடுத்து ஷர்மிளாவை நேரில் அழைத்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், அவருக்கு கார் வாங்குவதற்காக 3 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார். ஷர்மிளாவுக்கு கார் வாங்கி தரவில்லை 3 லட்சத்திற்கான காசோலைதான் வழங்கினார் என அவரது தந்தை பேட்டி கொடுத்தார்.
கஸ்தூரி டிவிட்இந்நிலையில் ஷர்மிளாவுக்கு கமலஹாசன் வாங்கிக் கொடுத்த கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இந்த காரை ஷர்மிளா ஓட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காரின் மதிப்பு 16 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பான வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை கஸ்தூரி, திமுகவின் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்தும் பதிவிட்டுள்ளார்.
கமலுக்கு கோரிக்கைஇதுதொடர்பாக கஸ்தூரி பதிவிட்டுள்ள டிவீட்டில், டக்குனு கார் வாங்கி குடுத்துட்டாரே கமல் ! தாராளமான செயல். ஆனால் எத்தனை எத்தனை ஷர்மிளாக்கள் இங்கு. எல்லோருக்கும் கார் வேண்டாம், மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகைக்கு வழியில்லை. தன் தோழமை கட்சி அரசுக்கு எடுத்து கூறுவாரா மய்யத்தலைவர்? என பதிவிட்டுள்ளார்.
மகளிர் உரிமை தொகைதிமுகவின் மகளிர் உரிமை தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த உரிமை தொகையை யார் யார் பெறமுடியும் என்ற கட்டுப்பாடுகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளும் இதனை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் திமுகவுடன் நல்ல நட்பை பாராட்டி வரும் நிலையில் அனைவருக்கும் அந்த திட்டம் பயன் அளிக்கும் வகையில் எடுத்து கூறுமாறு கோரிக்கை விடுத்துள்ளார் நடிகை கஸ்தூரி.
கஸ்தூரி பதிவு