Sridevi: ஒரே நேரத்தில் 4 பட ஷூட்டிங், நாலுக்கும் ஒரே ஹீரோ: விக்கை வைத்து படத்தை கண்டுபிடித்த ஸ்ரீதேவி

Janhvi Kapoor about mom Sridevi: ஸ்ரீதேவி தன்னிடம் கூறிய சம்பவம் பற்றி ஜான்வி கபூர் தெரிவித்ததை கேட்ட ரசிகர்களோ, அந்த ஹீரோ யாராக இருக்கும் என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

​ஸ்ரீதேவி​மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு தன் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் தன் வழியில் நடிகையாகக் கூடாது என விருப்பம். ஆனால் அம்மா நான் நடிகையாக விரும்புகிறேன் என்று ஜான்வி கூறியபோது அதை ஸ்ரீதேவி எதிர்க்கவில்லை. தடக் படம் மூலம் நடிகையானார் ஜான்வி கபூர். ஆனால் அந்த படம் ரிலீஸானபோது ஸ்ரீதேவி உயிருடன் இல்லை. ஸ்ரீதேவியை பற்றி அடிக்கடி பேசி வருகிறார் ஜான்வி.உதயநிதி ஸ்டாலின்​உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…​​ஜான்வி​துபாய்க்கு சென்ற ஜான்வி கபூர் பேட்டி ஒன்றில் தன் அம்மா பற்றி பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, என் அம்மா ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று ஷிஃப்ட் வேலை செய்து வந்தார். ஒரே நாளில் மூன்று முதல் நான்கு படங்களில் நடித்து வந்தபோது நடந்த ஒரு காமெடி கதையை என்னிடம் கூறினார். அவர் நடித்த படங்களின் பாடல் காட்சிகளை ஊட்டியில் ஷூட் செய்தார்கள் என்றார்.

​Anirudh: ஏ.ஆர். ரஹ்மானை ஓரங்கட்டி அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளரான அனிருத்?

​ஹீரோ​ஜான்வி கபூர் மேலும் கூறியதாவது, அந்த காலத்தில் அனைத்து பாடல்களையும் ஊட்டியில் தான் ஷூட் செய்தார்கள். அம்மா நடித்த அந்த நான்கு படங்களுக்கும் ஒரே ஹீரோ தான். ஆனால் அந்த ஹீரோ யார் என்பதை அம்மா என்னிடம் சொல்லவில்லை. ஹீரோவின் விக் மாறிக் கொண்டே இருக்கும். அதை வைத்து தான் எந்த பட பாடலை ஷூட் செய்கிறோம் என்பதே எனக்கு தெரியும் என அம்மா கூறினார் என்றார்.
​யார் அவர்?​ஒரே நேரத்தில் நான்கு படங்கள். நான்கு படங்களிலும் ஒரே ஹீரோ. படத்திற்கு படம் வித்தியாசமான விக் வைத்திருக்கிறார். அது யாராக இருக்கும் என சினிமா ரசிகர்கள் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார்கள். மேலும் ஸ்ரீதேவியின் கண்களே கதை பேசுமே. அவருக்கு இப்படியொரு மரணமா என ஃபீல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

​பல படங்கள்​ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பது மாறிவிட்டது. தற்போது எல்லாம் ஒரு இயக்குநரை சந்தித்தால் என் படத்தில் நடிக்கும்போது குறிப்பிட்ட நாட்கள் வரை என் படத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்கிறார்கள். ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க முடியாது. இதனால் பிளஸ்ஸும், மைனஸும் இருக்கிறது என ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.
​கெரியர்​ஜான்வி கபூர் தன்னுடைய பவால் பட ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். வருண் தவானும், ஜான்வியும் நடித்திருக்கும் பவால் நேரடியாக அமேசான் பிரைமில் ஜூலை 21ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படம் மூலம் கோலிவுட் வருகிறார் ஜான்வி என தகவல் வெளியானது. ஸ்ரீதேவி மகளை தான் தயாரிக்கும் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அழைத்து வருகிறார் கமல் ஹாசன் என்றார்கள். ஆனால் விக்னேஷ் சிவன் படம் தொடர்பாக ஜான்வியை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

​Kamal Haasan:ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரை தமிழில் அறிமுகம் செய்யும் கமல்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.