வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: அமெரிக்காவும் அதன் நேட்டோ நாடுகளும் ரஷ்யாவுடன் நேரடி ராணுவ மோதலுக்கான அபாயத்தை உருவாக்குகின்றன. இது பேரழிவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசுகையில், ரஷ்யாவுடனான உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நேட்டோவின் நட்பு நாடுகள், அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் அவரது படைகளுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் ஆயுதங்களைத் தொடர்ந்து வழங்கும்.
நேட்டோ அதன் வரலாற்றில் முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளது. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதைப் போலவே, உக்ரைனுக்கும் பாதுகாப்பு மற்றும் ஆயுதங்களை வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாரோவ் கூறும்போது, நேட்டோ மாநாடு காரணமாக ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமா என்பது குறித்து முழுமையாக பகுப்பாய்வு செய்யப்படும். அமெரிக்காவும் அதன் நேட்டோ நாடுகளும் ரஷ்யாவுடன் நேரடி ராணுவ மோதலுக்கான அபாயத்தை உருவாக்குகின்றன. இது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement