Jailer Second Single -இது டைகரின் கட்டளை..ஜெயிலர் செகண்ட் சிங்கிள் எப்போ ரிலீஸ் தெரியுமா?..வெளியானது அப்டேட்

சென்னை: Jailer Second Single Update (ஜெயிலர் இரண்டாவது சிங்கிள் அப்டேட்) ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிள் எப்போது வெளியாகும் என்ற அப்டேட்டை படக்குழு அறிவித்திருக்கிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அவருடன் மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, தமன்னா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகவிருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

வெற்றி பெறுமா ஜெயிலர்?: ஜெயிலர் படம் ரஜினிக்கும், நெல்சன் திலீப்குமாருக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இவர்கள் இருவரும் ஜெயிலருக்கு முன்னதாக பணியாற்றிய படங்கள் தோல்வியை சந்தித்திருக்கின்றன. எனவே இந்தப் படத்தை எப்படியாவது வெற்றி படமாக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கின்றனர் இரண்டு பேரும். அதற்கேற்றபடி நெல்சன் திலீப்குமாரின் உழைப்பு இந்தப் படத்தில் இருப்பதாக படக்குழு வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும், படம் நிச்சயம் ஹிட்டாகிவிடும் அதற்கான அறிகுறி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்போடு வெளியான க்ளிம்ப்ஸிலேயே தென்பட்டதாக ரசிகர்கள் கூறினர்.

ஃபர்ஸ்ட் சிங்கிள்: க்ளிம்ப்ஸ் வெளியான பிறகு எந்த அப்டேட்டும் ஜெயிலரிலிருந்து வெளியாகாமல் இருந்தது. சூழல் இப்படி இருக்க கடந்த வாரம் ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிளான காவாலா பாடல் வெளியானது. பாடலை இயக்குநரும், நடிகருமான அருண்ராஜா காமராஜ் எழுத; ஷில்பா ராவ் பாடியிருந்தார். பாடல் வெளியாகி இணையத்தில் இன்றுவரை ட்ரெண்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரோல்களை சந்தித்த சிங்கிள்: பாடலுக்கு ஒருபக்கம் பெரும் வரவேற்பு கிடைத்தாலும் மறுபக்கம் கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது. குறிப்பாக இந்தப் பாடலின் ட்யூன் எம்ஜிஆர் நடித்த ஒரு படத்தில் வரும் இசை என கூறி அந்த வீடியோவையும் பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். மேலும் பாடலின் வரிகள் சுத்தமாக புரியவில்லை. பாடலுக்கு அமைக்கப்பட்டிருக்கும் நடனமும் பெரிதாக ஈர்க்கவில்லை என கூறினர்.

Jailer Movie Second Single Will Release on

ரஜினிக்கா இந்த நிலைமை: அதுமட்டுமின்றி ரஜினியின் பாடலில் தமன்னா ஒட்டுமொத்தமாக ஸ்கோர் செய்துவிட்டார். ரஜினியை யாருமே பாடலில் கண்டுகொள்ளவில்லை என கூறி பல மீம்ஸ்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவந்தனர். சூழல் இப்படி இருக்க ஜெயிலர் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் அப்டேட் இன்று வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜெயிலர் செகண்ட் சிங்கிள்: இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி இன்று இரண்டாவது சிங்கிள் அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி பாடலானது வரும் 17aஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டைகரின் கட்டளை என்ற பெயரில் இந்தப் பாடல் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்போடு ஒரு போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனையடுத்து இந்தப் பாடல் நிச்சயம் ரஜினிக்கு முக்கியத்துவம் உள்ளதாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.