பிரான்ஸில் மவுசு காட்டிய போச்சம்பள்ளி பட்டு புடவை… சந்தன சிதார்.. காஷ்மீரி பட்டு கம்பளம்… அசர வைத்த மோடி!

பிரான்ஸ் பயணம்

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். பாரிஸ் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் எலிசபெத் போர்ன் விமான நிலையத்திற்கு வந்து இந்திய பிரதமர் மோடியை வரவேற்றார். தொடர்ந்து பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

பரிசுகள்

பின்னர் பாரிஸில் நடந்த பாஸ்டில் தின அணிவகுப்பில் கௌரவ விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி, பிரெஞ்சு தேசிய தின கொண்டாட்டங்களில் அதிபர் இம்மானுவேல் மேக்ரனுடன் இணைந்து பங்கேற்றார். அப்போது இருதரப்புக்கும் இடையே நினைவு பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அதன்படி பிரான்ஸ் அதிபர் மேக்ரன் மற்றும்ஃபிரெஞ்சின் முதல் பெண்மணி பிரிஜிட் மேக்ரன் மற்றும் பிரான்ஸ் நாடாளுமன்ற தலைவர் யெல்லே பிரவுன்-பிவெட் ஆகியோருக்கு பிரதமர் மோடி இந்திய கைவினைத்திறன் மூலம் தயாரிக்கப்பட்ட பரிசுகளை பிரதமர் வழங்கினார்.

மக்களே ஆபத்து… தீயாய் பரவும் டெங்கு… ஒரே நாளில் 11800 பேர் பாதிப்பு… 6 பேர் பலி… சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சந்தன மர சிதார்

பிரெஞ்சு நாடாளுமன்ற தலைவர் யேல் பிரவுன்-பிவெட்டுக்கு கையால் பின்னப்பட்ட காஷ்மீரி பட்டு கம்பளத்தை பரிசாக அளித்தார் பிரதமர் மோடி. பிரெஞ்சு செனட்டின் தலைவரான ஜெரார்ட் லார்ச்சருக்கு சந்தன மரத்தால் செதுக்கப்பட்ட யானை சிலையை வழங்கினார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரனுக்கு சந்தன மரத்தில் அழகிய வேலைபாடுகளுடன் செய்யப்பட்ட சிதார் இசைக்கருவியை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார்.

சரஸ்வதி விநாயகர் உருவங்கள்

இந்த சிதாரில் அறிவு, இசை, கலை, பேச்சு, ஞானம் மற்றும் கற்றலின் தெய்வமாகக் கருதப்படும் சரஸ்வதியின் உருவம் மற்றும் விநாயகப் பெருமானின் உருவங்கள் மற்றும் இந்திய தேசிய பறவையான மயில் ஆகியவை இடம் பெற்றிருந்தன. மேலும் இந்த ஸ்பெஷல் சிதார் தூய சந்தனத்தால் உருவாக்கப்பட்டிருந்தது.

பாகுபலியில் பறந்த சந்திரயான் – 3… பிரமிக்க வைக்கும் போட்டோஸ்!

போச்சம்பள்ளி பட்டு

இதேபோல் பிரெஞ்சு ஃபர்ஸ்ட் லேடியான அதிபரின் மனைவி பிரிஜிட் மேக்ரனுக்கு தெலுங்கானாவில் உள்ள போச்சம்பள்ளி நகரின் பாரம்பரிய பட்டு புடவையை வழங்கினார். போச்சம்பள்ளி பட்டு இந்தியாவின் வளமான ஜவுளி பாரம்பரியத்தின் முக்கிய சான்றாகும். சிக்கலான வடிவமைப்புகள் மற்றும் அழகிய வண்ணங்களுக்கு பெயர் பெற்ற போச்சம்பள்ளி பட்டு இகாட் சேலை இந்தியாவின் அழகு, கைவினைத்திறன் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பேசும் பொக்கிஷம் என்றும் போற்றப்படுகிறது.

மோடிக்கு பரிசு

தொடர்ந்து பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னுக்கு பளிங்கு கற்களுக்கு பெயர் பெற்ற ராஜஸ்தானின் மார்பிள் கற்களால் செய்யப்பட்ட அழகி டைனிங் பிளேட்டுகளை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி. இதேபோல் பிரான்ஸ் அதிபர் மேக்ரனும் பிரதமர் மோடிக்கு 1916ஆம் ஆண்டு பாரிஸ் நாட்டவர் ஒருவர் சீக்கிய அதிகாரிக்கு மலர்கள் வழங்கும் புகைப்படம் உட்பட பல பாரம்பரிய பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

திருப்பதி பக்தர்களுக்கு செம ஜாக்பாட்… ரூ.2900 கோடியில் வெளியான அறிவிப்பு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.