அரசு பள்ளிகளில் 10 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனம்… அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியராக வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். இதற்காக D.TEd, B.Ed போன்ற படிப்புகளை படித்து விட்டு TET, TRB ஆகிய தேர்வுகளுக்கு தொடர்ந்து படித்து வருகின்றனர். ஆசிரியர் தகுதி தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து இரண்டு முறை காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டதாக தெரிகிறது.

அதிரடி ஆய்வு நடத்திய அன்பில்

ஆசிரியர்கள் நியமனம்

இதையடுத்து 2017, 2019, 2022 என மூன்று முறை தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் நியமனத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பலரும் மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பேர் ஆசிரியர் கனவுடன் கல்லூரிகளில் படித்து முடித்து விட்டு வெளியேறுகின்றனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு

இதனால் போட்டி அதிகமாகி கொண்டே செல்கிறது. ஏற்கனவே தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர்ந்தால் தானே, பின்னால் வருபவர்கள் நம்பிக்கை உடன் தயாராக முடியும். ஆனால் நிலைமை அப்படி இல்லாததால் தனியார் பள்ளிகளில் அதிக வேலைப்பளு உடன் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்த்து வருகின்றனர்.

தற்காலிக ஆசிரியர்களுக்கு வாய்ப்பு

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காலி பணியிடங்களில் 10 ஆயிரம் நிரந்தர ஆசிரியர்களை பணியில் அமர்த்துவதற்கு நிறைய கால அவகாசம் தேவை. எனவே பெற்றோர் – ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு ஆகியவற்றின் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அறிவிப்பாணை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு வரை

அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு முதலில் தகுதித் தேர்வு தொடர்பாக அறிவிப்பாணை வெளியிட வேண்டும். அதன்பிறகு தேர்வுகளை நடத்தி சான்றிதழ்கள் சரிபார்ப்பு என கால அவகாசம் ஆகும். இதற்கிடையில் சட்ட ரீதியிலான சிக்கல்களும் இருக்கின்றன.

இன்னும் 6 மாதங்கள்

இவற்றை எல்லாம் சரிசெய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை ஆசிரியர்களை நியமிக்க குறைந்தது 6 மாதங்கள் ஆகும். இதுதொடர்பாக அரசு ஆலோசனை செய்து வருகிறது. அதுவரை தற்காலிக ஆசிரியர்கள் பொறுப்பை கவனித்து கொள்வர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

கடந்த ஆட்சியில் TRB மூலம் ஆசிரியர்கள் பணி நியமனம் நிறுத்தப்பட்டிருந்தது. இதை சரிசெய்து பழைய நிலைக்கு கொண்டு வருவதில் தற்போதைய அரசுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே ஒவ்வொரு பிரச்சினையாக சரிசெய்து அரசு உரிய ஏற்பாடுகளை செய்யும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.