வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மெல்போர்ன: ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்திய மாணவர் மீது இரும்பு கம்பியால் கொடூர தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக கேட்டு போராடி வந்த காலிஸ்தான் அமைப்பினருக்கு நம் நாட்டில் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அமைப்பினரும், அதன் ஆதரவாளர்களும் வட அமெரிக்க நாடான கனடா, ஐரோப்பிய நாடான பிரிட்டன், பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களில் வசித்து வருகின்றனர்.
இங்கு, இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வரும் இவர்கள், இந்திய வம்சாவளியினர் மீது தாக்குதலும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் தங்கி படித்து வரும் இந்திய மாணவர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து தாக்குதலுக்கு ஆளான மாணவர் கூறியதாவது:
நான் காரில் ஏறி அமர்ந்தவுடன், எங்கிருந்தோ வந்த கும்பல் என்னை இரும்பு கம்பியால் தாக்கியது. பின், காரில் இருந்து வெளியே இழுத்து தள்ளி மீண்டும் ஆயுதங்களால் தாக்கினர். இதை அவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர்.
என்னை தாக்கும் போது, ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என, அவர்கள் கோஷமிட்டனர்.
காலிஸ்தான் பிரச் னையை எதிர்த்ததற்கு இது தான் பாடம் என கூறிய அவர்கள், மீண்டும் எதிர்த்தால், இது தான் நடக்கும் என எச்சரித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாக்குதலில் படுகாயமடைந்த மாணவருக்கு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement