சியோல்: தென் கொரியாவில் கொட்டி வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் பலியாகிஉள்ளனர்.
கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில் கடந்த 9ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களாக இடைவிடாது கொட்டி வரும் மழையால் முக்கிய நகரங்கள் வெள்ளக் காடாக மாறியுள்ளன.
இரு மத்திய நகரங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் மூன்று பேர் பலியானதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நோன்சன் நகரில் கட்டடம் இடிந்து விழுந்ததில் இருவரும், நிலச்சரிவில் சிக்கி இருவரும் உயிரிழந்தனர்.
ஏச்சியான் நகரை சுற்றி உள்ள கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மாயமான இருவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ரயில் தடம்புரண்டது மற்றும் நிலச்சரிவு காரணமாக ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தொடர் மழையால், பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
மேலும் இரு நாட்கள் மழை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நோன்சன், ஏச்சியான் நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 1,570 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement