Elon Musk says Twitter is losing cash because advertising is down and the company is carrying heavy debt | ” அதிக கடன் சுமையில் டுவிட்டர் நிறுவனம் “: எலான் மஸ்க் சொல்கிறார்

வாஷிங்டன்: டுவிட்டரில் விளம்பரங்கள் பாதியாக குறைந்து விட்டதால், நிறுவனம் அதிக கடன் சுமையில் உள்ளது என அந்நிறுவனம் சிஇஓ எலான் மஸ்க் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, டுவிட்டர் சிஇஓ எலான் மஸ்க் கூறியிருப்பதாவது:

டுவிட்டருக்கான விளம்பரங்கள் 50 சதவீதமாக குறைந்துள்ளது. நாங்கள் இன்னும் நஷ்டத்தில் தான் இயங்கி கொண்டிருக்கிறோம். அதிக கடன் சுமையில் நிறுவனம் உள்ளது. வியாபாரம் சார்ந்த மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு முன்பாக டுவிட்டர் நிறுவனத்தை லாபப் பாதைக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதல் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறார். அதன்படி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பதிவிடும் கருத்துக்களில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். இதையடுத்து, வெளியேறிய விளம்பரதாரர்கள் மீண்டும் வருவார்கள்.

டுவிட்டர் நிறுவனம் லாபப் பாதையில் பயணிக்கும் என கடந்த ஏப்ரலில் மஸ்க் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது, விளம்பரங்கள் பாதியாக குறைந்து விட்டதால், நிறுவனம் அதிக கடன் சுமையில் உள்ளது என மஸ்க் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

latest tamil news

இதற்கிடையே டுவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் த்ரெட்ஸ் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதனை அதிகம் பேர் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.