புதுடில்லி: அர்ஜென்டினாவின் ராணுவ அமைச்சர் ஜோர்ஜ் என்ரிக் தையானா நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் ராணுவ அமைச்சர் ஜோர்ஜ் என்ரிக் தையானா நான்கு நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார். புதுடில்லி வந்த அவருக்கு நம் நாட்டின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று அவர் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பு குறித்து இருவரும் விவாதிக்க உள்ளதாக, நம் ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாள் பயணத்தின்போது, ஜோர்ஜ் என்ரிக் தையானா பெங்களூரு செல்லவும் திட்டமிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement