எடப்பாடி செம குஷி: அடேங்கப்பா என்ன கவனிப்பு, என்ன மரியாதை! மோடிக்கு அப்புறம் நாங்க தான்!

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. நாடு முழுவதிலுமிருந்து 38 கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளன.

தமிழ்நாட்டிலிருந்து அதிமுக, பாமக, தமாகா, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. புதுச்சேரியிலிருந்து என்.ஆர்.காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளது. பவன் கல்யாணின் ஜன சேனா, லோக் ஜனசக்தியின் இரு பிரிவுகள், ராஷ்ட்ரீய லோக் சமதா, நிஷாத், அப்னா தளம், ஜேஜேபி, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, சிவசேனாவின் ஷிண்டே பிரிவு, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பிரிவு உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

புது டெல்லியில் அமைந்துள்ள அசோகா ஹோட்டலில் இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர்

பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு அருகிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு இடம் ஒதுக்கப்பட்டது. எடப்பாடிக்கு அடுத்து தான் ராஜ்நாத் சிங்குக்கு இடம் ஒதுக்கப்பட்டது.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுக்கும் போதும் மோடிக்கு அருகில் எடப்பாடி பழனிசாமிக்கு இடம் வழங்கப்பட்டது.

நடைபயணம், நட்டா, நாடாளுமன்றம் தேர்தல் அடுத்து என்ன

இது குறித்து அதிமுக வட்டாரத்தில் பேசினோம். “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவையும் அதன் தலைவர்களையும் சீண்டும் விதமாக பேசி வரும் நிலையில் டெல்லி தலைமையோ அதிமுகவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டத்துக்கு அழைக்காததை வைத்தே இதை உணர்ந்து கொள்ள முடியும்.

அதுமட்டுமல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணியில் 38 கட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் பாஜகவுக்கு அடுத்தபடியாக பெரிய கட்சி அதிமுக தான். 65 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 மாநிலங்களவை உறுப்பினர்களைப் பெற்றுள்ளோம். இந்த பலம் பாஜகவுக்கு அடுத்தபடியாக வேறு எந்த கட்சிக்கும் இல்லை.

மக்களவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணியில் உள்ள சின்ன சின்ன உரசல்கள் எல்லாம் மறைந்து வெற்றி என்ற இலக்கை நோக்கி நாங்கள் ஓடத் தயாராகிவிட்டோம். கடைசி நேரத்தில் நம்மையும் இணைத்துக் கொள்வார்கள் என்று சில கட்சியினரும், கோஷ்டியினரும் நினைக்கலாம், அவர்களுக்கு இங்கு இடமில்லை” என்று கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.