பெங்களூரு நகரின் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தாஜ் வெஸ்ட் எண்ட் நட்சத்திர ஹோட்டலில், இரண்டு நாட்களாக எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற 26 கட்சிகளின் தலைவர்களையும் வரவேற்று, நகர் முழுதும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த கூட்டத்தில், பீஹார் முதல்வர் நிதீஷ்குமாரும் பங்கேற்றார்.
இந்நிலையில், ஹோட்டலை சுற்றியுள்ள சாளுக்கியா சதுக்கம், வின்ட்சன் மேனர், ஹெப்பால், ரேஸ்கோர்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் நிதீஷ் குமாருக்கு எதிராக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
அதில், பீஹாரின் சுல்தானாகஞ்ச் மேம்பாலம், கடந்த ஏப்ரல், ஜூன் மாதத்தில் இரண்டு முறை இடிந்து விழுந்ததை குறிப்பிட்டு, ‘தரமான மேம்பாலம் கட்ட முடியாத இவர் எப்படி எதிர்க்கட்சிகளை ஒற்றுமையுடன் செயல்பட வைப்பார்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
தகவலறிந்த காங்கிரஸ் மேலிட தலைவர்கள், உடனடியாக சர்ச்சைக்குரிய பேனர்களை அகற்றும்படி உத்தரவிட்டனர். அதன்படி, போலீசார் அவசர அவசரமாக பேனர்களை அகற்றினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement