புதுடில்லி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் சிலரது, ‘பான்’ கார்டு முடங்கியதற்கான காரணம் குறித்து வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
பான் எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதை மத்திய அரசு சமீபத்தில் கட்டாயமாக்கியது.
இரண்டையும் இணைக்காதவர்களின் பான் கார்டு முடக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த விதிமுறையிலிருந்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், சமீப காலமாக சில வெளிநாடு வாழ் இந்தியர்களின் பான் கார்டு செயல்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, வருமான வரித்துறை அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டுஉள்ளதாவது:
கடந்த மூன்று ஆண்டு களில் குறைந்தது ஒரு முறையாவது வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களின் பான் கார்டு செயல் இழந்திருக்க கூடும்.
மேலும், தங்கள் வசிப்பிடம் குறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு முறையான ஆவணங்களுடன் விபரம் தாக்கல் செய்யாதவர்களின் பான் கார்டும் செயல் இழந்திருக்கலாம்; இதை பான் கார்டு முடக்கமாக கருதக் கூடாது. விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement