Leo: லியோ கைதி போன்ற படம்னு சொன்ன லோகேஷ்: குஷியில் தளபதியன்ஸ், பயத்தில் த்ரிஷா ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் முதல் பாடலான நா ரெடி வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இது வெறும் பாட்டு அல்ல, அரசியலுக்கு வர நா ரெடி என்கிறார் தளபதி என விஜய் ரசிகர்கள் தெரிவித்தனர்.

உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜிடம் லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் எப்பொழுது வரும் என கேள்வி எழுப்பப்பட்டது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதற்கு லோகேஷ் கனகராஜ் கூறியதாவது,

செகண்ட் சிங்கிள் லேட்டாகும் என நினைக்கிறேன். ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள் விடுற மாதிரி படமே இல்ல. இது கைதி மாதிரியான படம் என்றார்.

லோகேஷ் தெரிவித்ததை கேட்ட விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே த்ரிஷா ரசிகர்களோ பயத்தில் இருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் படத்தில் ஹீரோயினை உயிருடன் விட மாட்டார். இந்நிலையில் கைதி மாதிரியான படம் என்றால் கண்டிப்பாக த்ரிஷாவை போட்டுத்தள்ளிவிடுவார். தலைவியை கொலை செய்யத் தான் இப்படி நடிக்க அழைத்து வந்தாரா என த்ரிஷா ரசிகர்கள் தான் பாவம் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Vijay: அஜித் விஷயத்தில் நிறுத்துங்க, ரஜினி விஷயத்தில் இதை செய்ங்க: ரசிகர்களுக்கு விஜய் உத்தரவு?

லியோவில் த்ரிஷாவை கொடூரமாக கொலை செய்யும் காட்சி இருக்கும் என ரசிகர்கள் நம்புகிறார்கள். முன்னதாக லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தபோது பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் த்ரிஷா.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ, உங்களை கொலை செய்யத் தான் அந்த ஆளை மும்பையில் இருந்து காஷ்மீருக்கு அழைத்து வந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இது கூட தெரியாமல் சஞ்சய் தத்துடன் போய் சிரித்த முகமாக புகைப்படம் எடுத்திருக்கிறீர்களே த்ரிஷா என ரசிகர்கள் ஃபீல் செய்தார்கள்.

லியோ படத்தில் கடைசி நேரத்தில் மடோனா செபாஸ்டியனை சேர்த்திருக்கிறார்கள். அவர் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மனைவியாக வருகிறாராம். த்ரிஷாவை விட மடோனாவின் கதாபாத்திரம் தான் வெயிட்டானது என்று கூறப்படுகிறது.

14 ஆண்டுகள் கழித்து விஜய்யுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் த்ரிஷா. அந்த படத்தில் போய் அவரை கொலை செய்ய வேண்டுமா லோகேஷ் என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

த்ரிஷா ரசிகர்களுக்கு இந்த கவலை. ஆனால் விஜய் ரசிகர்களுக்கோ வேறு ஒரு கவலை. அதாவது லியோ படத்தில் சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன், மதுசூதன் ராவ், அனுராக் கஷ்யப் என ஒரு பட்டாளமே வில்லனாக நடித்திருக்கிறது. அது போதாது என்று ஒரே ஊரையே லியோவில் நடிக்க வைத்திருக்கிறார் லோகேஷ்.

இந்த கூட்டத்தில் விஜய்ணாவின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் பாதிக்கப்படுமே என்பது தான் தளபதி ரசிகர்களின் கவலையே.

இதற்கிடையே லியோ படம் ரிலீஸாவதற்கு முன்பே ரூ. 350 கோடி வசூல் செய்துவிட்டது. அதனால் ரிலீஸான பிறகு வசூலில் புது சாதனை படைக்கும். பாக்ஸ் ஆபீஸ் சும்மா அதிரப் போகுது பாருங்கள் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.