Thalapathy vijay: அரசியல் கட்சியை துவங்க தேதி குறித்த தளபதி..இனி பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது

தமிழ் சினிமாவில் தளபதியாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் விஜய். இவர் படத்திற்கு படம் புது புது வசூல் சாதனைகளை செய்து இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார். தற்போது லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் நடித்து முடித்துள்ள தளபதி அடுத்ததாக வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்திய திரையுலகமே விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தை ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே டிஜிட்டல் ரைட்ஸ் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் என பல கோடிகளுக்கு வியாபாரம் ஆகியுள்ளது.

அரசியல் கட்சி

மேலும் இப்படம் வெளியான பிறகு ஆயிரம் கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதையடுத்து விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக 200 கோடி சம்பளமாக வாங்கவுள்ளதாக செய்திகள் வருகின்றன.

Hukum: அப்போ சொன்னாரு..இப்போ செஞ்சிட்டாரு..ரஜினியை பற்றி வெளிப்படையாக பேசிய விஜய்..!

இந்நிலையில் விஜய் தளபதி 68 படத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகள் நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாக பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த தகவலில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை. விஜய் விரைவில் அரசியலில் களமிறங்க இருப்பதால் தான் நடிப்பில் இருந்து சில காலம் விலக இருக்கின்றார் என தகவல்கள் வருகின்றன.

சமீபகாலமாக விஜய் அரசியலில் களமிறங்க தயாராகி வருகின்றார் என அவரின் நடவடிக்கைகளை பார்த்தாலே அனைவர்க்கும் தெரிகின்றது. இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி விஜய் புது கட்சி ஒன்றை துவங்க இருப்பதாகவும், வரும் செப்டம்பர் மாதம் விஜய் தன் புது கட்சியை துவங்குவார் என்றும் தகவல்கள் வருகின்றன.

செப்டம்பர் மாதம் துவக்கம்

அவ்வாறு விஜய் கட்சியை துவங்கினால் அந்த செய்தி இந்தியளவில் ஹாட் டாபிக்காக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.கடந்த மாதம் விஜய் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியது பலரால் பாராட்டப்பட்டு வந்தது.

https://news.google.com/publications/CAAqBwgKMPOGqQsw5ZHBAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

மேலும் விஜய் இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் அவரை அரசியலிலும் நாங்கள் ஆதரிப்போம் என பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவர் செப்டம்பர் மாதம் கட்சி துவங்கவுள்ளார் என்ற செய்தி தற்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் பரவலாக பேப்பட்டு வரும் செய்தியாக இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.