சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களின் வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கொடுத்து வருகிறது. லஞ்ச புகாரில் சிறை சென்ற கண்ணன் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
தொடர்ந்து தன்னுடைய அண்ணி, தனத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் கண்ணன், ஒரு கட்டத்தில் அவரது காலை பிடித்துக் கொண்டு கதறுகிறார்.
தனம் குறித்த உண்மையை குடும்பத்தினரிடம் போட்டுடைத்த மீனா: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக தொடர்ந்து இடம்பெற்று வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். சேனலில் இரண்டாவது இடத்தை தொடர்ந்து கெட்டியாக பிடித்து வருகிறது. தமிழில் உருவாகியுள்ள தொடர் என்ற பெருமையுடன், தமிழ்நாட்டின் பெருமைகளில் ஒன்றான கூட்டுக்குடும்பத்தின் பெருமையை பேசும் தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளது. காலமாற்றத்தினால் தமிழ்நாட்டிலேயே இந்த வழக்கம் தற்போது அதிகமாக காணப்படாத நிலையில், சகோதரத்துவத்தை அதிகமாக பேசும் தொடராக பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளது.
4 சகோதரர்களின் ஒற்றுமையை மையமாக கொண்டு அடுத்தடுத்த எபிசோட்களை ஒளிபரப்பி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். அவர்கள் மட்டுமில்லாமல் அவர்களின் மனைவிகளின் உணர்வுகளையும் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. குடும்பத்திற்காகவும் அதன் ஒற்றுமைக்காகவும் ஒருவருக்காக மற்றவர்கள் துடிப்பதையும் இந்தத் தொடரில் அதிகமாக காண முடிகிறது. சிறிய வீட்டில் இவர்கள் அனைவரும் கூட்டுக்குடும்பமாக இருந்ததையும் பார்க்க முடிந்தது.
பிரச்சினை காரணமாக 3 குடும்பமாக இவர்கள் பிரிந்த நிலையில், வாழும் வழி தெரியாமல் பிரச்சினையில் சிக்கும் கடைக்குட்டி கண்ணனை வீட்டிற்கு அழைத்து வருகிறார் கதிர். தொடர்ந்து வாங்கியக் கடனுக்காக லஞ்சம் வாங்கும் கண்ணன், தான் தவறு செய்யாத ஒரு சூழலில் லஞ்ச புகாரில் சிக்கி சிறை செல்கிறார். இதனால் குடும்பத்தினர் நிலை தடுமாறுகின்றனர். ஜாமீனில் வீடு திரும்பும் கண்ணன், தன்னுடைய அண்ணன் மூர்த்தி, அண்ணி தனம் உள்ளிட்டவர்களின் காலில் விழுந்து கதறி அழுது மன்னிப்பு கேட்கிறார்.

இதனிடையே, மார்பக புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்படும் தனம், தன்னுடைய சிகிச்சையை தொடர்ந்து தள்ளிப் போட்டு வருகிறார். அவர்குறித்த உண்மை தெரிந்த மீனா, அவரை சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடியாமல் பரிதவிக்கிறார். என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடுகிறார். தொடர்ந்து சிகிச்சையை தள்ளிப்போடுவதால், நோய் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுவிடும என்று தனத்திடம் அவர் கூறினாலும், அதை தனம் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை.
இந்நிலையில், இதுகுறித்து தனத்திடம் மிகவும் கோபத்துடன் சண்டையிடுகிறார் மீனா. அதை முல்லை பார்த்துவிடுகிறார். இந்நிலையில், முல்லைக்கு இந்த விஷயத்தில் சந்தேகம் எழுகிறது. இதுகுறித்து மீனாவிடம் கேட்கிறார் முல்லை. தனம் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவருக்கு இருக்கும் பிரச்சினையை கூறும்படி கேட்கிறார் முல்லை. இதையடுத்து பொறுக்க முடியாத மீனா, முல்லையிடம் உண்மையை போட்டு உடைக்கிறார்