650 பெண்களுடன் படுக்கையை பகிர்ந்துக் கொண்ட கில்லாடி கிரிக்கெட்டர்!

சர்வதேச கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி சரிவை சந்தித்து வருகிறது. அவர்களின் ODI அணி இந்த ஆண்டு ஆண்கள் உலகக் கோப்பையில் விளையாடாது மற்றும் T20 அணி ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் T20 உலகக் கோப்பை 2022 இல் விளையாடவில்லை. இருப்பினும் கிறிஸ் கெய்ல், பிரையன் லாரா, டுவைன் பிராவோ உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை வெஸ் இண்டீஸ் தொடர்ந்து உருவாக்கி வருகிறது.

70 மற்றும் 80 களில் மேற்கிந்திய தீவுகள் அணி, உலக சாம்பியன்களாக இருந்தது மற்றும் 90களில் கூட அவர்கள் மிகவும் அருமையான கிரிக்கெட் அணியாக இருந்தட்னர். தற்போது, ஊடகங்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், பிரபலங்களின் சின்னச் சின்ன அசைவுகள் அம்பலமாகிறது என்றால், தாங்களவே தங்கள் ரகசியத்தை சிலர் சொல்லி சர்ச்சைகளை ஏற்படுத்துகின்றனர்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியைப் பற்றிய மற்றொரு சுவாரஸ்யமான விஷயம், வீரர்களின் வாழ்க்கை முறை. தி கபில் சர்மா ஷோவில் தீபக் சாஹர் அளித்த பேட்டி ஒன்றில், தனது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி வீரருக்கு பல தோழிகள் இருப்பதாகவும் அவர்களுடன் குழந்தைகளும் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களில் பலரி வாழ்க்கை முறை திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளால் நிரம்பியுள்ளது.  

அத்தகைய வீரர்களில் ஒருவரான டினோ பெஸ்ட், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் கெய்ல், பிராவோ மற்றும் பொல்லார்ட் ஆகியோரின் சக வீரர் ஆவார். பெஸ்ட், தனது 2016 ஆம் ஆண்டு சுயசரிதையான ‘மைண்ட் தி விண்டோஸ்: மை ஸ்டோரி’யில் (‘Mind The Windows: My Story’), அவர் தனது வாழ்க்கையில் 650 பெண்களுடன் உல்லாசமாக பொழுதுபோக்கியதாக தெரிவித்திருந்தார்.

பெஸ்ட் தன்னை ‘பிளாக் பிராட் பிட்’ என்றும் அழைத்தார், மேலும் அவர் உலகின் மிக அழகான வழுக்கைத் தலை பையன் என்றும் கூறினார். “நான் பெண்களை நேசிக்கிறேன் என்றால், பெண்கள் என்னை நேசிக்கிறார்கள். நான் உலகின் சிறந்த தோற்றமுடைய வழுக்கைத் தலை பையன் என்று எண்ணுகிறேன். நான் கருப்பு பிராட் பிட் என்று என்னை நானே சொல்லிக் கொள்வேன்” என்று அவர் குறிப்பிட்டதாக டெய்லிமெயிலில் செய்தி வெளியாகியிருந்தது. அவர் பெண்களுடன் பழகுவதையும், அவர்களுடன் உறங்குவதையும் விரும்புவதாகவும், ஏற்கனவே 500 முதல் 650 பெண்களுடன் தனது படுக்கையை பகிர்ந்துக் கொண்டதாக கூறினார்.

எந்தப் பெண்களாலும் தான் ஒருபோதும் பயமுறுத்தப்படவில்லை என்றும், துணையில்லாமல் தனியாக இருக்கும் பெண்களிடம் தன்னுடன் டேட்டிங் செய்ய கூப்பிடும் பழக்கத்தைப் பற்றி கூறிய பெஸ்ட்,  “நான் யாரை டேட்டிங் செய்ய விரும்புகிறேனோ அவர்களைத் தேர்ந்தெடுப்பேன். வாரத்திற்கு ஐந்து அல்லது ஆறு நாட்கள் வெவ்வேறு பெண்களுடன் செல்வேன்….” ஆம், எனக்கு அப்படி இருக்க பிடிக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெண்… ஜாலியாக இருந்தேன், அதனால் நான் இளமையாக இருந்தேன், அந்த வாழ்க்கை முறையை விரும்பினேன்” என்று பெஸ்ட் கூறினார்.

41வயதான பெஸ்ட், வெஸ்ட் இண்டீஸுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தபோதும் பெண்களுடன் இரவை கழிந்த்திருப்பதாகத் தெரிவித்தார். உலகம் சுற்றும் இந்த வாலிபருக்கு, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் காதலிகள் உண்டாம். 2005 இல் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின்போது, 40 பெண்களுடன் தூங்கியதாக பெஸ்ட் கூறுகிறார்.

“எனக்கு 24 வயது, அந்தச் சுற்றுப்பயணத்தில் நான் ஒரு டெஸ்டில் விளையாடவில்லை. பயிற்சியாளர் பென்னட் கிங்கிற்கு என்னுடைய இந்தப் பழக்கம் பிடிக்காது. நான் வெளியே சென்று, ஓரிரு பெண்களை அழைத்துக் கொண்டு எங்கள் ஹோட்டலுக்குத் திரும்ப அழைத்துச் செல்வேன். ஒரு தொழில்முறை விளையாட்டு வீரருக்கான விலையுயர்ந்த ஹோட்டல், அங்கு வருவதற்கு பெண்கள் விரும்பினர்,” பெஸ்ட் கூறினார்.

சுற்றுப்பயணத்தில் இருக்கும் போது பெண்களுடன் உறங்குவதும், வெளியூர் செல்வதும் தனது விளையாட்டை பாதிக்கவில்லை என்று பெஸ்ட் கூறினார். இரவில் ஜாலியாக இருந்தபோது, பகலில் வலைகள் மற்றும் ஜிம்மில் மிகவும் கடினமாக உழைத்து பயிற்சி எடுத்ததாக அவர் கூறினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அவரை விட கடினமாக பயிற்சி செய்தவர்கள் யாரும் இல்லை, என்றார் பெஸ்ட். “நான் இரண்டு பெண்களை அழைத்து வந்து அவர்களுடன் உடலுறவு கொண்டால், நான் இன்னும் காலையில் அங்கு கடினமாக உழைக்கிறேன். நான் அதைப் பற்றி புத்திசாலித்தனமாக இருந்தேன், எந்த பிரச்சனையிலும் சிக்கவில்லை” என்று பெஸ்ட் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.