சென்னை: Vettaiyaadu Vilaiyaadu Re Release (வேட்டையாடு விளையாடு ரீ ரிலீஸ்) வேட்டையாடு விளையாடு படத்தின் ரீ ரிலீஸின் வசூல் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
மின்னலே படத்தின் இயக்குநராக அறிமுகமானவர் கௌதம் மேனன். முதல் படத்தை லவ் ஜானரில் கொடுத்த கௌதம் இரண்டாவது படமான காக்க காக்க படத்தை ஆக்ஷன் ஜானரில் கொடுத்தார். முதல் இரண்டு படங்களும் மெகா ஹிட்டாகின. குறிப்பாக காக்க காக்க படத்தின் மேக்கிங் அந்தப் படம் வெளியான சமயத்தில் பெரிதாக பேசப்பட்டது. இதனையடுத்து கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக உயர்ந்தார் கௌதம் மேனன்.
வேட்டையாடு விளையாடு: அந்தப் படத்துக்கு பிறகு கமல் ஹாசனை வைத்து வேட்டையாடு விளையாடு படத்தை இயக்கினார். மாணிக்கம் நாராயணன் தயாரித்த அந்தப் படத்தில் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியாகி படம் சக்கைப்போடு போட்டது.
ஃபேன் பாய் சம்பவம்: திரைத்துறையில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் கமல் ஹாசனின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள். தற்போது லோகேஷ் கனகராஜ் மேடைக்கு மேடை தான் எவ்வளவு பெரிய கமல் ரசிகன் என்பதை வெளிக்காட்டி வருகிறார். ஆனால் அவருக்கெல்லாம் முன்னதாக கமல் ஹாசனின் தீவிர ரசிகராக அறியப்பட்டவர் கௌதம் மேனந்தான். அவர் கையில் போட்டிருக்கும் காப்புக்கூட சத்யா படத்தை பார்த்துவிட்டுத்தான் போட்டதாக தெரிவித்திருக்கிறார்.
அதகளமான சீன்ஸ்: கமல் ஹாசனின் தீவிர ரசிகர் என்பதால் வேட்டையாடு விளையாடு படத்தை ஃப்ரேம் பை ஃப்ரேமாக செதுக்கியிருந்தார் கௌதம். கமலின் இண்ட்ரோ பாடலான கற்க கற்க பாடல், கமல் ஹாசனின் ஓபனிங் காட்சி, அந்தக் காட்சியில் கண்ணு வேனும்னு கேட்டியாமே காட்சி எல்லாம் அவ்வளவு மாஸாக இருக்கும் என கமல் ரசிகர்கள் காலரை தூக்கிவிட்டுக்கொள்வர். மேலும் படத்தையே ஸ்டைலிஷாக உருவாக்கியிருந்தார். மிகச்சிறந்த் இன்வஸ்டிகேட்டிவ் ஜானர் க் அதை என்ற பெயரையும் படம் பெற்றது.
ரீ ரிலீஸ்: இந்தச் சூழலில் சமீப காலமாக ஏற்கனவே வெளியான படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவது அதிகரித்திருக்கிறது. ரஜினியின் பாபாகூட அப்படி ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அந்தவகையில் வேட்டையாடு விளையாடு படமும் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. முதன்முறை படம் ரிலீஸானபோது எப்படி ரெஸ்பான்ஸ் இருந்ததோ அதேபோல்தான் ரீ ரிலீஸுக்கும் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இதுகுறித்து கௌதம் மேனனும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
வேட்டையாடு விளையாடு வசூல்: இந்நிலையில் வேட்டையாடு விளையாடு படத்தின் ரீ ரிலீஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, இதுவரை அந்தப் படம் ஒரு கோடி ரூபாயை வசூலித்திருப்பதாகவும்; இன்னும் சில திரையரங்குகளில் ஒரு சில காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது எனவும் கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் ரீ ரிலீஸிலி ஒரு கோடி ரூபாய் என்பது சாதாரணமில்லை. உண்மையில் வேட்டையாடு விளையாடு வசூலில் வேட்டையாடியிருக்கிறது என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.