பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தரமான சம்பவம்… தெலங்கானா டூர்… ஐடி துறைக்கு பலே ஸ்கெட்ச்!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்றதும் அவரது பாரம்பரிய அரசியல் பின்னணி தான் பலருக்கும் நினைவுக்கு வரும். 2021ல் முதலமைச்சர்

தலைமையில் முதல்முறை திமுக ஆட்சி அமைந்ததும் நிதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஜி.எஸ்.டிக்காக மத்திய அரசிடம் மல்லுக்கட்டுவது முதல் திராவிட மாடலுக்காக வரிந்து கட்டி கொண்டு பதிலடி கொடுப்பது வரை அரசியல் களத்தில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வந்தார்.

கைபேசியை விட ,நூலில் படிப்பதே சிறந்த முறை!- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழக அரசியலில் பாபரப்பு

இந்நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ ஒன்று வெளியாகி தமிழக அரசியலை புரட்டி போட்டது. தற்போது ஐடி துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். நிதித்துறையை போலவே ஐடி துறையிலும் சிறப்பான வகையில் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாக பேசப்படுகிறது. இவர் தனது துறை சார்ந்த அதிகாரிகள் உடன் தெலங்கானா மாநிலத்திற்கு சென்றுள்ளார்.

தெலங்கானாவில் சுற்றுப்பயணம்

இவர்களுக்கு அம்மாநில தலைமை செயலகத்தில் ஐடி மற்றும் தொழிற்துறை அமைச்சர் கே.டி.ராமாராவ் சிறப்பான வரவேற்பு அளித்தார். இதையடுத்து தெலங்கானாவில் ஐடி துறை சார்ந்த முன்னெடுப்புகள் குறித்து அமைச்சர் கே.டி.ராமாராவ் விளக்கினார். மேலும் தெலங்கானா மாநில ICT பாலிசி, கிராமப்புற தொழில்நுட்ப மையங்கள் தொடர்பான பாலிசி, புதுமை திட்டங்களுக்கான பாலிசி, எலக்ட்ரானிக்ஸ் பாலிசி, கேமிங் மற்றும் அனிமேஷன் பாலிசி,

ஐடி துறை பாலிசிகள்

சைபர் பாதுகாப்பு பாலிசி, டேட்டா சென்டர் பாலிசி, ஓப்பன் டேட்டா பாலிசி உள்ளிட்டவையும் விளக்கப்பட்டன. பிடிஆர் தலைமையிலான குழுவினர் தெலங்கானாவில் ஐடி மற்றும் இ-ஆளுமை சார்ந்த முன்னெடுப்புகள், கொள்கை முடிவுகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து சில படிப்பினைகளை பெறவுள்ளனர்.

முதலீடுகள் ஈர்க்கும் திட்டம்

இதற்காக T-Hub, T-Works, WE Hub உள்ளிட்டவற்றிற்கு நேரில் செல்கின்றனர். தற்போது ஹைதராபாத் நகரம் மிக வேகமாக வளர்ந்து ஐடி ஹப்பாக திகழ்ந்து வருகிறது. இதன் அடிப்படையான திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவுள்ளனர். அதுமட்டுமின்றி ஐடி துறையில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நிறுவனங்களுக்கு எவ்வாறு கதவுகளை திறந்து விடுவது,

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குழு

அரசு எந்தெந்த வழிகளில் முயற்சிகள் எடுத்து வருகிறது, உள்கட்டமைப்பு வசதிகளுக்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுத்து கொண்டிருக்கிறது, நிதி மேலாண்மை உள்ளிட்ட தகவல்களை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் அறிந்து கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.