Kidnapping of Gil Hindu sisters in Pak.: The brutality of conversion marriage | பாகிஸ்தானில் 3 ஹிந்து சகோதரிகள் கடத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கராச்சி: பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகளை கடத்திச் சென்று, மதம் மாற்றி முஸ்லிம் இளைஞர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள தார்கி கிராமத்தில், ஹிந்து சிறுபான்மையின மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள லீலா ராம் என்ற வர்த்தகருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களை, மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று, முஸ்லிம் மதத்திற்கு மாற்றியதுடன், கட்டாய திருமணமும் செய்தனர்.

இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தும் அவர்கள் குற்றவாளிகளுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சமீபத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம் பெண் சீமா ஹைதர், 30, தன் நான்கு குழந்தைகளுடன் இந்தியாவில் உள்ள தன் காதலன் சச்சினிடம் தஞ்சமடைந்தார்.

இச்சம்பவத்தின் எதிரொலியாக இப்பகுதியில், ஹிந்துப் பெண்களை குறிவைத்து இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதேபோல், பாகிஸ்தானில் உள்ள இரண்டு ஹிந்து கோவில்கள் மீதும் சமீபத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.