வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இம்பால்: மணிப்பூரில் பழங்குடியினத்தை சேர்ந்த பெண்கள், நிர்வாணப்படுத்தி இழுத்து வரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், சுதந்திர போராட்ட வீரரின் மனைவி ஒருவர் வீட்டிற்குள் வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் வெளியாகி உள்ளது.
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் மெய்டி சமூகத்தினருக்கும், குகூ சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மே 4 ம் தேதி கூகி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மெய்டி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், சாலையில் இழுத்துச் சென்றனர். அந்தப் பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். கூட்டு பலாத்காரமும் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், கலவரத்தில் பல கொடூர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவை ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளது.

கக்சிங் மாவட்டத்தின் சிரோவு கிராமத்தில் வசித்து இபிதோம்பி(80). இவரது கணவர் சுதந்திர போராட்ட வீரர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காலமான இவரை, நாட்டிற்கு ஆற்றிய சேவையை பாராட்டி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கவுரவப்படுத்தி உள்ளார்.

கடந்த 28 ம் தேதி இந்த கிராமத்தில் வன்முறையில் கிராமம் சூறையாடப்பட்டது. துப்பாக்கிச்சூடும் நடந்துள்ளது. அப்போது, இபிதோம்பி வீட்டில் இருந்துள்ளார். அந்த பகுதிக்கு வந்த வன்முறை கும்பல், அவரை வீட்டிற்குள் வைத்து பூட்டினர். பிறகு வீட்டிற்கு தீ வைத்தனர். அதில், உறவினர்கள் வந்து காப்பாற்றுவதற்குள் தீயில் கருகி இபிதோம்பி உயிரிழந்தார். இந்த சம்பவம் தற்போது வெளியாகி மக்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement