வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நாடு முழுவதும் அனைத்து மாநில பள்ளிகளில் 6 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்குவது குறித்த விசாரணை நாளை (24 ம் தேதி) சுப்ரீம் கோர்டில் நடைபெற உள்ளது.
![]() |
6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான சிறுமிகளுக்கு இலவச சானிட்டரி பேட் வழங்கவும், அனைத்து அரசு உதவி பெறும் மற்றும் குடியிருப்புப் பள்ளிகளில் தனி பெண் கழிப்பறை வசதியை உறுதி செய்யவும் மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் உத்தரவிடக் கோரி சமூ சேவகரான ஜெயா தாக்கூர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
மனுவில் 11 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள்,,மற்றும் ஏழை பின்னணியில் இருந்து வரும் இளம்பெண்கள், கல்வி கிடைக்காமலும்,போதிய வசதிகள் இல்லாமலும் மற்றும் மாதவிடாய் சுகாதாரம் பற்றி பெற்றோரால் போதிக்கப்படவில்லை. என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நாளை ( 24 ம் தேதி) தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது.
![]() |
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத்தில் , சுப்ரீம் கோர்ட் இந்த பிரச்சினை “மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது” என்றும், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் உட்பட பள்ளிகளில் மாதவிடாய் சுகாதாரத்தை நிர்வகிப்பதற்கான ஒரே மாதிரியான தேசிய கொள்கையை செயல்படுத்த அனைத்து பங்குதாரர்களுடன் மத்திய அரசு ஈடுபட வேண்டும் என்றும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement