மும்பை: Shah Rukh Khan (ஷாருக்கான்) நடிகர் ஷாருக்கான் வீட்டில் கட்டப்படும் மின்சார கட்டணம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
பாலிவுட் பாஷா என அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவருக்கென்று இந்தியா முழுவதும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இவர் கடைசியாக பதான் படத்தில் நடித்திருந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின் ஷாருக்கான் நடித்திருந்த படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கிய அந்தப் படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பதானுக்கு எதிர்ப்பு: நான்கு ஆண்டுகளுக்கு பின்பு ஷாருக்கான் நடித்திருப்பதால் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது. படத்தின் சிங்கிள் பாடல் வெளியானபோது அதில் தீபிகா படுகோன் அணிந்திருந்த உடையை வைத்து ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பலரும் படத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்புகளுக்கு இடையில் படமானது கடந்த ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
பாசிட்டிவ் விமர்சனம்: இந்தச் சூழலில் படத்துக்கு எந்த மாதிரியான விமர்சனங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் பதான் படத்துக்கு ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்தனர். மேலும் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியிருந்த பதானில் ஷாருக்கானின் நடிப்பும், ஜான் ஆபிரஹாமின் வில்லத்தனமும் சிறப்பாக இருந்ததாகவும் குறிப்பிட்டனர். குறிப்பாக வயது ஏற ஏற ஷாருக்கானுக்கு இளைமையும் கூடுகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். உலகம் முழுவதும் அந்தப் படமானது 1000 கோடி ரூபாய் வசூலித்தது.
ஜவான்: பதான் படத்துக்கு பிறகு அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்திருக்கிறார் ஷாருக்கான். படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். அந்தப் படத்தில் நயன் தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகிபாபு, ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படமானது செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் அண்மையில் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

கரண்ட் பில்: இந்நிலையில் ஷாருக்கான் வீட்டில். கரண்ட் பில் எவ்வளவு கட்டப்படுகிறது என்பது தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி 45 லட்சம் ரூபாய் மின்சார கட்டணமாக செலுத்தப்படுகிறதாம். இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்னது கரண்ட் பில்லே 45 லட்சம் ரூபாயா அப்படி என்னதான் அவர் வீட்டில் எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்துகிறாரோ. தலையே சுத்துதே என ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
ஷாருக்கானின் அடுத்த படம்: ஷாருக்கான் ஜவான் படத்துக்கு பிறகு டன்கி என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் டாப்சி ஹீரோயினாக நடிக்கிறார். படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். டன்கி படத்தின் ஷூட்டிங்கானது காஷ்மீரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி முதல் ஷெட்யூல் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சில மாதங்களுக்கு முன்னர் ஷாருக் காஷ்மீர் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.