புதுடெல்லி: டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் ஒரு விமானம் தயாரானது. அதில் ஏற முற்பட்ட 3 பேரின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
அப்போது, பைக்குள் இருந்த காலணியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7.2 லட்சம் அமெரிக்க டாலர்கள் மற்றும் 4,66,200 யூரோ ஆகியவற்றை (ரூ.10 கோடி) சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வெளிநாட்டு கரன்சிகளை வைத்திருந்தவர்கள் தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமான வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். இதுகுறித்து, விமான நிலைய சுங்கத் துறை (டெர்மினல் 3) அதிகாரிகள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.