டாக்கா : வங்கதேசத்தில் ஏரியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உட்பட, 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 35 பேர் காயமடைந்தனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், பிரோஜ்பூர் பந்தாரியாவில் இருந்து பாரிஷால் பகுதிக்கு நேற்று முன்தினம் பெண்கள், குழந்தைகள் என, 60 பேருடன் ஒரு பஸ் புறப்பட்டது. சத்ரகந்தா பகுதியில் சென்றபோது சாலையோரம் இருந்த ஏரியில், எதிர்பாராதவிதமாக பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், பஸ்சில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், மூன்று குழந்தைகள் உட்பட, 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட, 35 பேரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இறந்தவர்கள் பெரும்பாலானோர் பந்தாரியா மற்றும் ராஜாபூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. பஸ் டிரைவரின் அலட்சியம் மற்றும் அதிகளவு பயணியரை ஏற்றிச் சென்றதே விபத்துக்கான காரணம் எனவும் தெரியவந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement