தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாபிக்காக இருந்து சைலண்ட் மோடிற்கு சென்றவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. வருமான வரித்துறை தொடங்கி அமலாக்கத்துறை வரை ரெய்டு, விசாரணை என பரபரப்பை கூட்டினர். கடைசியில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கையில் இறங்கும் போது நெஞ்சு வலி காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு பைபாஸ் அறுவை சிகிச்சை, மருத்துவ கண்காணிப்பு, ஓய்வு என வாரங்கள் ஓடின.
புழல் சிறையில் செந்தில் பாலாஜி!
செந்தில் பாலாஜி தம்பி அசோக்
இதற்கிடையில் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் வேறு வழியின்றி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது முதல் தர வசதிகள் கொண்ட அறையில் செந்தில் பாலாஜி இருக்கிறார். மறுபுறம் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் எங்கே என்ற கேள்வி தொடர்ந்த வண்ணம் உள்ளது. செந்தில் பாலாஜிக்கு குறி வைக்கப்பட்டிருந்த சமயத்தில் தான் அவரது தம்பிக்கும் செக் வைக்கப்பட்டது.
அமலாக்கத்துறை சம்மன்
ஆனால் தனக்கு இதய நோய் இருப்பதாக காரணம் காட்டி நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்த விஷயத்தை நீதிமன்றமே ஒருமுறை கண்டித்திருந்தது. இருப்பினும் அசோக் குமார் ஆஜராகவில்லை. ஒருமுறை, இரண்டு முறை அல்ல. நான்கு முறை அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு விட்டது. ஆள் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. எப்போது ஆஜராவார் என்பதும் தெரியவில்லை.
சட்ட நடவடிக்கைகள்
இந்த சூழலில் தான் மேலும் 4 வாரங்கள் அவகாசம் கோரியுள்ளதாக அசோக்குமாரின் வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் ஏமாற்றம் அடைந்த அமலாக்கத்துறை, இப்படியே விட்டால் சரிவராது எனக் கருதி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தே ஆக வேண்டும். இல்லையெனில் அவர் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் எனத் தெரிகிறது.
பணப்பரிமாற்றம்
இன்னும் ஒருமுறை தான் சான்ஸ். அதில் மிஸ்ஸானால் கைது செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த வாய்ப்பில்லாத சூழலில், அவரது தம்பியிடம் இருந்து விஷயங்களை கறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்ட விரோத பணப் பரிமாற்ற விஷயத்தில் ஏதேனும் துப்பு கிடைக்குமா?
சிறை கதவுகள் திறக்குமா?
பணத்தை எங்கே முதலீடு செய்துள்ளனர்? போன்ற விவரங்களை சேகரித்து சிறை கதவுகளை மேலும் இறுக்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லாதது
தலைமைக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. வரும் மக்களவை தேர்தலுக்குள் செந்தில் பாலாஜி வெளியே வந்து விடுவாரா? இல்லை விசாரணை, தண்டனை என இழுபறியாக சென்று சிறை கதவுகள் திறக்க வாய்ப்பில்லாமல் போய்விடுமா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.