Police officer commits suicide after shooting his wife | மனைவியை சுட்டுக்கொன்று போலீஸ் அதிகாரி தற்கொலை

புனே: மஹாராஷ்டிராவில் உதவி போலீஸ் கமிஷனர் தன்மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்தவர் பாரத் கெய்க்வாட்,56, இவரது மனைவி மோனிகா கெய்க்வாட்,44, பாரத் கெய்க்வாட் சமீபத்தில் தான் அமராவதி நகர துணை(ஏ.சி.பி.ப) காவல் ஆணையாளராக இடம் மாறுதல் பெற்றார்.

சம்பவத்தன்று இன்று மாலை 3:30 மணியளவில் வீட்டில் இருந்த போது திடீரென தான் வைத்திருந்த சர்வீஸ் துப்பாக்கியால் மனைவி மோனிகா, மற்றும் அவரது உறவினர் தீபக் 35 இருவரையும் சுட்டுக்கொன்றுவிட்டு தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த சதூர்சிரிங் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.