சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் லியோ படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
செப்டம்பர் மாதத்தில் லியோ படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை அல்லாத வேறு மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் நடிகர் விஜய் சுற்றுலா கொண்டாட்டம்: நடிகர் விஜய் அடுத்தடுத்த படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். இந்த ஆண்டின் துவக்கத்தில் பொங்கல் கொண்டாட்டமாக அவரது வாரிசு படம் வெளியான நிலையில், இந்த ஆண்டிலேயே அவரது லியோ படம் அக்டோபர் 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. அடுத்தடுத்து நிற்கக்கூட நேரமில்லாமல் நடிகர் விஜய் தன்னுடைய படங்களில் பொது நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்கேற்று வருகிறார்.
லியோ படத்தின் சூட்டிங் வாரிசு ரிலீசை தொடர்ந்து சில தினங்களிலேயே அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டு காஷ்மீரில் சூட்டிங்கும் துவங்கியது. காஷ்மீரில் கடுமையான குளிர், நிலநடுக்கம் போன்றவற்றிற்கிடையில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. கடுமையான பிரச்சினைகளுக்கிடையில் நடத்தப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் குறித்த வீடியோவும் வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாகவும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் படக்குழு சார்பில் இயக்குநர் லோகேஷ் கனரகாஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அடுத்ததாக படத்தின் ட்ரெயிலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அப்டேட் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இசை வெளியீட்டை சென்னை அல்லாத மற்றொரு மாவட்டத்தில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அநேகமாக மதுரையில் இசை வெளியீடு நடக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தன்னுடைய அடுத்தப்படம் குறித்த அறிவிப்பையும் செய்துள்ள விஜய், விரைவில் அந்தப் படத்தின் சூட்டிங்கில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
இதனிடையே, லியோ படத்தில் தன்னுடைய போர்ஷனை முடித்துள்ள நடிகர் விஜய், தன்னுடைய குடும்பத்தினருடன் வெளிநாட்டில் சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அவர் எந்த நாட்டிற்கு செல்லவுள்ளார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் அவர் விமானநிலையத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. தொடர்ந்து சில தினங்கள் வெளிநாட்டில் கழிக்கவுள்ள விஜய், இசை வெளியீட்டையொட்டி நாடு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.