சென்னை: கோமாளி, லவ் டுடே படங்களின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஒன்றாக சென்று வந்த நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு விக்னேஷ் சிவன் வாழ்த்தி உள்ளார்.
அஜித்தின் படத்தை மிஸ் செய்த விக்னேஷ் சிவன் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்துத் தான் படம் இயக்கப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிளாக்பஸ்டர் லவ் டுடே: ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தில் தானே ஹீரோவாகவும் நடித்து இளம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான தனி இடத்தை பிடித்து விட்டார்.
பிரதீப் ரங்கநாதன், இவானா, யோகி பாபு, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அந்த படம் 5 கோடியில் உருவாக்கப்பட்டு 50 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில்: அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னமும் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் இருவருமே தங்களது அடுத்த படம் குறித்த அப்டேட் எதுவுமே வெளியிடவில்லை.
கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு இருவரும் ஒன்றாக சென்று வந்த நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வாழ்த்தி உள்ளார்.
உத்தமன் பிரதீப்புக்கு பிறந்தநாள்: இயக்குநர் விக்னேஷ் சிவன் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிஸ்டர் நைஸ் என்றும் உத்தமன் பிரதீப் என்றும் குறிப்பிட்டு இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அவரது வாழ்த்தை பார்த்த பிரதீப் ரங்கநாதன் உங்களுடன் இணைந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டு வருகிறேன், அனைத்துக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் கோரிக்கை: இப்படி இருவரும் இன்ஸ்டாகிராமில் ஜாலியாக சாட் செய்து வருவதை பார்த்து ஹேப்பியான ரசிகர்கள், அப்படியே இருவரும் சீக்கிரம் உங்கள் அடுத்த பட அப்டேட்டை வெளியிட்டால் சந்தோஷப்படுவோம் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
லவ் டுடே திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆக உள்ள நிலையில், இன்னமும் ரசிகர்களை பிரதீப் ரங்கநாதன் ரொம்பவே காக்க வைத்து வருகிறார். அதே போல ஏகே 62ல் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்ட நிலையில், அவரது அடுத்த பட அறிவிப்புக்காகவும் ரசிகர்கள் வெயிட்டிங்.