சென்னை: குக் வித் கோமாளி மூலம் பிரபலமான சிவாங்கியை நடுரோட்டில் மானத்தையே வாங்கி விட்டார் கூல் சுரேஷ், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது.
விஜய் டிவி பிரபலமாக சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி என கலக்கிக் கொண்டிருக்கும் சிவாங்கி சில படங்களில் நடித்தும் சில படங்களில் பாடல்களை பாடியும் வருகிறார்.
சந்தானம் நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை ப்ரமோட் செய்யும் விதமாக சாலையில் டிரிங் அண்ட் டிரைவ் பண்ணக் கூடாது என்றும் ஹெல்மட், சீட் பெல்ட் போட்டு வண்டி ஓட்ட வேண்டும் என்றும் நடிகர் கூல் சுரேஷ் விளம்பரப்படுத்திக் கொண்டு இருக்கும் போது தான் வசமாக சிவாங்கி சிக்கினார்.
சாலை விழிப்புணர்வில் இறங்கிய கூல் சுரேஷ்: சென்னை போக்குவரத்து காவல் துறையினர் உதவியுடன் சாலை விழிப்புணர்வில் நடிகர் கூல் சுரேஷ் இன்று களத்தில் இறங்கினார். சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை வித்தியாசமாக பயன்படுத்தும் வகையில் Drink and Drive செய்யக் கூடாது என்றும் ஹெல்மட், சீட் பெல்ட் கட்டாயம் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளார் கூல் சுரேஷ்.
எப்போதுமே தியேட்டர் வாசலில் முதல் நாள் FDFS கொண்டாட்டத்தில் வெந்து தணிந்தது காடு என சொல்லி அலப்பறையை கூட்டி வரும் கூல் சுரேஷ் என்னடா இப்படி புதுசா இறங்கி இருக்காரே என ரசிகர்கள் ஆர்வத்துடன் அவரது வீடியோக்களை பார்த்து வருகின்றனர்.

வசமாக சிக்கிய சிவாங்கி: அப்போது அந்த சாலையில் சிவாங்கி தனது காரில் வந்துக் கொண்டிருக்கும் போது, அவரை வழிமறித்த கூல் சுரேஷ் சிவாங்கி சீட் பெல்ட் போடாமல் காரில் செல்லக் கூடாது என்றும் பிரபலங்கள் ஆகிய நாமே ரூல்ஸை மதிக்கவில்லை என்றால் பொதுமக்கள் எப்படி ஃபாலோ பண்ணுவாங்க என வச்சு செய்து விட்டார்.
மேலும், டிரிங்க் அண்ட் டிரைவ் பண்ணக் கூடாது சிவாங்கி என சொல்லி நடுரோட்டில் சிவாங்கியை டோட்டலாக டேமேஜ் செய்து விட்டார் கூல் சுரேஷ். ஹெல்மட் போடாமல் பைக்கில் செல்லும் நபர்களையும் நிறுத்தி அவர்களுக்கும் அட்வைஸ் கொடுத்துள்ளார் கூல் சுரேஷ்.