
பிக்பாஸ் ஜனனியை கலாய்க்கும் நெட்டிசன்கள்
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ஜனனி, லாஸ்லியா போல் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுப்பார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது வரை அவர் எந்தவொரு படத்திலும் நடித்து வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சமூகவலைதளத்தில் அடிக்கடி போட்டோஷூட், ரீல்ஸ் என ஆக்டிவாக இருக்கும் ஜனனி தற்போது ஜெயிலர் படத்தின் காவாலா பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ள இந்த பாடலுக்கு ஜனனி சற்று சொதப்பலாக தான் நடனமாடியுள்ளார். இதனை கிண்டலடிக்கும் வகையில் நெட்டிசன்கள் 'இதெல்லாம் ஒரு டான்சா? போய் டான்ஸ் கத்துக்கிட்டு வாம்மா' என அவரை கிண்டலடித்து வருகின்றனர்.