பார்படாஸ்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பார்படாசில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் அறிமுக வாய்ப்பு பெற்றார்.
குல்தீப் கலக்கல்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங், கெய்ல் மேயர்ஸ் ஜோடி துவக்கம் தந்தது. பாண்ட்யா ‘வேகத்தில்’ மேயர்ஸ் (2) அவுட்டானார். அதானசை 22 ரன்களில் முகேஷ் வெளியேற்றினார். பிரண்டன் கிங் (17) ஏமாற்றினார்.
குல்தீப் ‘சுழலில்’ கேப்டன் ஷாய் ஹோப் (43), டொமினிக் (3) உள்ளிட்டோர் சிக்கினர். மற்றவர்களும் ஏமாற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவரில் 114 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 4 விக்கெட் கைப்பற்றினார்.
எளிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு இம்முறை இஷான், சுப்மன் துவக்க ஜோடியாக களமிறங்கியது. சுப்மன் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பாக செயல்பட்ட இஷான் (52) அரை சதம் அடித்தார். இந்திய அணி 22.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 118 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் (12), ஜடேஜா (16) அவுட்டாகாமல் இருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement