நாகை: தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆளும் திமுக கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தில், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பலன்கள் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்து சுமார் மூன்று ஆண்டுகள் ஆகியும் பழைய ஓய்வூதிய திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு […]
