ஆபத்தில் தெலுங்கானா.. 15 அடி உயரத்துக்கு சூழ்ந்த வெள்ளம்.. தவிக்கும் மக்கள்… ஒரே நாளில் 64 செ.மீ கொட்டித்தீர்த்த மழை!

தெலுங்கானாவில் நேற்று ஒரே நாளில் 64.9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

தெலுங்கானா மழைதெலுங்கானா மாநிலத்தில் கடந்த வாரம் முதலே பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணம் தொடர்ந்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. தென் மேற்கு பருவமழையின் தீவிரம் மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக இப்படி மழை வெளுத்து வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
​ மதுவுக்கு அடிமையானவர்கள்… தமிழக அரசு அதிரடி முடிவு… ஷாக் கொடுத்த அமைச்சர் முத்துசாமி!​கடல் போல் காட்சிஇதனால் அப்பகுயில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக வடக்கு தெலுங்கானா வெள்ளத்தால் கடல் போல் காட்சியளிக்கிறது. வடக்கு தெலுங்கானாவில் உள்ள பல மாவட்டங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு துண்டிக்கப்பட்டுள்ளன. ஓடைகள், ஆறுகள் மற்றும் ஏரிகளும் நிரம்பி வழிந்ததால் கரைகள் உடைந்து தண்ணீர் குடியிருப்பு பகுதியில் நுழைந்துள்ளது.​ காவாலா பத்தலயா? இந்தாங்க… தெறிக்கவிடும் தமன்னா!​
மீண்டும் 60 செமீக்கு மேல்நேற்று முன்தினம் ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் 60 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் தெலுங்கானா மாநிலத்தில் முளுகு மாவட்டத்தில் 64 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. 60 சென்டி மீட்டர் மழை பொழிவே சமீபத்தில் பார்த்ததில்லை என கூறி வரும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் நேற்று பெய்த 64 சென்டி மீட்டர் மழை பொழிவை பார்த்து மிரண்டு போயுள்ளனர்.​ நடை பயணமும்.. சொகுசு பேருந்து பயணமும் – அண்ணாமலை பிளான் இது தான்!​
வெள்ளக்காடு​​வரலாறு காணாத மழைஅதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் 64. 9 சென்டி மீட்டர் அளவுக்கு வரலாறு காணாத கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. தெலுங்கானாவில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டி வரும் மழை புதுப்புது ரெக்கார்டுகளை உருவாக்கி வருகிறது. முளுகு மாவட்டத்தின் வெங்கடாப்பூர் மண்டலத்தில் இந்த அதி தீவிதர மழை கொட்டியுள்ளது.
​ சிங்கப்பூர் அதிபர் தேர்தல் ரேஸில் தமிழர்.. யார் இந்த தர்மன் சண்முகரத்தினம்?​15 அடி உயரத்துக்கு வெள்ளம்ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டம் மொரஞ்சப்பள்ளியில் 15 அடி உயரத்துக்கு குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து அப்பகுதியில் சிக்கியிருந்த சுமார் 2000 பேர் பேரிடர் மீட்புப்படையினர் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நிமிடம் வெள்ள நீரின் அளவு அதிகரித்ததால் மரணத்தின் விளிம்பில் இருந்ததாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
​ ப்பா… ஹாலிவுட் ஹீரோயின் போல் இருக்கும் ஷங்கர் மகள்.. அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் போட்டோக்கள்!​வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுஇருப்பினும் இந்த வெள்ளத்தில் கிராம மக்கள் இரண்டு பேர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இதேபோல் மகபூபாபாத் மாவட்டம் பெத்தவங்கரா மண்டலத்தில் உள்ள போச்சம்பள்ளி கிராமத்தில் உள்ள ஓடையில் இரண்டு சகோதரர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் இந்த கனமழையால் பலியாகியுள்ளனர்.
​ உதயநிதிக்கு ரூ. 2000 கோடி.. போக்குவரத்துத்துறை அமைச்சரின் வேலை இதுதான்… அண்ணாமலையின் பகீர் புகார்!​மக்களுக்கு எச்சரிக்கைஇதேபோல் பூபாலபள்ளி மற்றும் ஹனுமகொண்டா ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளிலும் இடைவிடாமல் கனமழை கொட்டி வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு வீரர்கள், நீச்சல் வீரர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.
​ அண்ணாமலை ஒரு காலி பாத்திரம்… ஆர்எஸ் பாரதி கடும் விமர்சனம்!​​கொட்டும் மழை​​இன்றும் விடுமுறைகனமழை காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிக் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பருவமழை தெலுங்கானா மாநிலத்தை உருக்குலைத்து புரட்டி போட்டுள்ளது.
​ திருப்பதி பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்.. பாதையில் வரும் மெகா மாற்றங்கள்.. மாஸ்டர் பிளான்!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.