வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புடில்லி: தீ விபத்து வழக்கு சம்பவத்தில் டில்லி உப்ஹார் திரையரங்கில் சீலை அகற்ற டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1997 ஜூன் 13-ல் தெற்கு டெல்லியில் இருந்த உப்ஹார் திரையரங்கில் நேரிட்ட தீ விபத்தில் 59 பேர் பலியாகினர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2015-ல் அளித்த தீர்ப்பில், உப்ஹார் திரையரங்க உரிமையாளர்கள் சுஷில் அன்சால், கோபால் அன்சால் ஆகியோருக்கு தலா ரூ.30 கோடி அபராதம் விதித்தது.
![]() |
அபராதத்தை செலுத்த தவறி னால் 2 ஆண்டுகள் சிறை தண்ட னையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு திரையரங்கிற்கு சீல வைத்தனர். இதைத் தொடர்ந்து இருவரும் அபராதத் தொகையை செலுத்தி சிறை தண்டனையிலிருந்து தப்பினர்.அதில் கோபால் அன்சாலுக்கு (66) ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வயது முதுமை காரணமாக சுஷில் அன்சால் (77) விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு விட்டதால், திரையரங்கில், கிளப், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் கட்ட வேண்டி சீலை அகற்ற வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் வலியுறுத்தியதையடுத்து சீலை அகற்ற டில்லி கோர்ட் உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement