Raveena Ravi: இப்படி நடக்கும்ன்னு எதிர்பார்க்கலை: 'மாமன்னன்' ரத்னவேல் மனைவி உருக்கம்.!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி ஒரு மாதங்கள் கடந்த நிலையிலும் ‘மாமன்னன்’ படம் குறித்த பேச்சுக்கள் இன்னமும் ஓய்ந்தப்படாக இல்லை. திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்ட இந்தப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி டிரெண்டிங்கில் கலக்கி வருகிறது. இந்நிலையில் ‘மாமன்னன்’ படத்தில் பகத் பாசிலின் மனைவியாக நடித்த ரவீனா ரவி தற்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். சமூக நீதி குறித்து பேசும் படங்களாக வெளியான இந்த இரண்டு படைப்புகளும் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் கவனம் ஈர்த்தது. இதனையடுத்து தற்போது தனது மூன்றாவது படமாக மாமன்னனை இயக்கினார். தன்னுடைய கடைசி படத்தை மாரி செல்வராஜ் தான் இயக்க வேண்டும் என விரும்பினார் உதயநிதி ஸ்டாலின்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அவரின் விருப்பப்படியே உதயநிதியின் கடைசி படமாக ‘மாமன்னன்’ வெளியாகி அவரது சினிமா கெரியரிலே அதிகம் வசூல் செய்துள்ளது. மாமன்னனாக வடிவேலு டைட்டில் ரோலில் நடித்த இந்தப்படத்தில், அவரது மகனாக அதிவீரன் கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்தார். மேலும் ரத்னவேலுவாக பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ், லால், ரவீனா ரவி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்தனர்.

தனது அப்பாவின் சுயமரியாதைக்காக போராடும் ஒரு மகனின் கதையாக ‘மாமன்னன்’ படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். மேலும் சமூகத்தில் காலம் காலமாக நிலவும் சாதி ரசியல் குறித்தும் இந்தப்படத்தில் பேசினார் மாரி செல்வராஜ். கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப்படத்தை திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டி தள்ளினர்.

STR 48: சிம்புவுக்காக களமிறங்கும் ஆண்டவர்.. முரட்டு சம்பவம்: எதிர்பாராத ட்விஸ்ட்.!

இதனையடுத்து தற்போது ‘மாமன்னன்’ படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தில் வில்லனாக பகத் பாசில் நடித்த ரத்தினவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் சில காட்சிகளை கட் செய்து சாதி பெருமை பேசும் பாடல்களை இணைத்து சோஷியல் மீடியாவில் வைரலாக்கினர். இந்த வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பின.

இந்நிலையில் ‘மாமன்னன்’ படத்தில் ரத்தினவேல் பாண்டியன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்த ரவீனா ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘என் கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஜோதி எப்போது என் மனதுக்கு நெருக்கமானவளாக இருப்பாள்’ என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. டப்பிங் குயினான ரவீனா ரவி ‘மாமன்னன்’ படத்தில் வசனமே பேசாமல் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth: பட்டையை கிளப்ப போகும் ‘தலைவர் 170’: ரஜினியுடன் இணையும் பிரபல நடிகர்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.