Jailer: அது மட்டும் வேண்டவே வேண்டாம்..கண்டிஷன் போட்ட ரஜினி..ஓகே சொன்ன நெல்சன்..!

கோலிவுட் வட்டாரத்தில் தற்போது ஜெயிலர் படத்தை பற்றிய பேச்சு தான் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவான இப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது.

இதையொட்டி தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இப்படம் துவங்கப்பட்ட போது இருந்த எதிர்பார்ப்பை விட தற்போது பலமடங்கு எதிர்பார்ப்பு ஜெயிலர் படத்திற்கு இருந்து வருகின்றது. அதற்கு மிக முக்கிய காரணம் படத்தின் ப்ரோமோஷன் யுக்திகள் தான் எனலாம்.

ரஜினியின் கண்டிஷன்

மோகன்லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் என இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் இருந்து வெளியான பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இதனால் ஜெயிலர் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.

Ajith: சூப்பர்ஸ்டார் இடத்தை அடைய நான் ஆசைப்பட்டேன்..ஆனால்..வெளிப்படையாக பேசிய அஜித்..!

இதைத்தாண்டி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படத்தை பற்றியும், இயக்குனர் நெல்சனை பற்றியும் பல விஷயங்களை பேசினார் ரஜினி. குறிப்பாக நெல்சனின் கடைசி படமான பீஸ்ட் சரியாக போகவில்லை என்றாலும் வணிக ரீதியாக பீஸ்ட் வெற்றி படம் தான் என கூறினார்.

மேலும் இயக்குனரின் சப்ஜெக்ட் தான் தோற்கின்றதே தவிர இயக்குனர் தோற்பதில்லை எனவும் கூறி நெல்சனின் மீது தான் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தினார் ரஜினி. இந்நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படம் வெளியாக இன்னும் ஐந்தே நாட்கள் இருக்கும் நிலையில் ரஜினி நெல்சனுக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளதாக தெரிகின்றது.

ஓகே சொன்ன நெல்சன்

அதாவது பீஸ்ட் படத்தின் வெளியீட்டிற்கு முன்பு நெல்சன் ஊடகங்களுக்கு பேட்டிகள் கொடுத்தார். அந்த பேட்டிகளில் நெல்சன் பேசிய சில விஷயங்களால் ரசிகர்கள் அவரை விமர்சிக்க துவங்கினர். அது படத்திற்கு பலவீனமாக அமைந்தது என அப்போது சில பேச்சுக்கள் போய்க்கொண்டிருந்தன.

எனவே ஜெயிலர் படத்திற்கு நெல்சன் ஊடகத்திற்கு பேட்டிகள் கொடுக்கவேண்டாம் என ரஜினி கேட்டுக்கொண்டாராம். இதையடுத்து நெல்சனும் பேட்டிகள் கொடுக்கப்போவதில்லை என்ற முடிவிற்கு வந்துள்ளார் என தகவல்கள் வருகின்றன. ஆனால் இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.