கொப்பால் : ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, அரசு பஸ் வயலில் கவிழ்ந்தது.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் இருந்து கொப்பால் மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ், 11 பயணியருடன் சென்றது.
நேற்று மாலை 4:00 மணியளவில் கொப்பால் மாவட்டம், சிர்சிக்கு சென்று கொண்டிருந்தது. ஹனுமந்தி என்ற பகுதி அருகே செல்லும் போது, சாலை குறுகலாக இருந்ததால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, பக்கவாட்டில் வயல் பகுதியில் கவிழ்ந்தது.
பஸ் கவிழ்ந்ததை பார்த்த அப்பகுதியினர் ஓடி வந்து, பஸ்சில் சிக்கியவர்களை மீட்டு, அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். பயணியர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சிர்சி ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement