ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி: அமைச்சர் கொடுத்த அப்டேட்!

கர்ப்பிணி தாய்மார்களுக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் விடுபட்ட, தவறிய தடுப்பூசி தவணைகளை அளிக்கும் வகையில் தீவிர மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டில் இந்த திட்டம் மூன்று சுற்றுக்களாக தமிழ்நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உயிர்களை காக்கும் தடுப்பூசிகள்!

நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு 12 வகையான தடுப்பூசியினால் தடுக்கப்படக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

தீவிர மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டம்!

தடுப்பூசி தவணைகளை தவறவிட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நோக்கில் தீவிர மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டம் 2014 முதல் செயல்படுத்தப்படுகிறது. நடப்பு ஆண்டு இந்த திட்டம் மூன்று சுற்றுக்களாக நடைபெறும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அன்று வெள்ளையனே வெளியேறு இன்று மோடியே வெளியேறு

இன்று திட்டம் தொடக்கம்!

“முதல் சுற்று ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 12 வரையிலும், இரண்டாம் சுற்று செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 16 வரையிலும், மூன்றாம் சுற்றுஅக்டோபர் 9 முதல் அக்டோபர் 14 வரையிலும் நடைபெறுகிறது. ஒவ்வொரு சுற்றும் 6 நாட்கள் நடைபெறுமாறு திட்டமிடப்பட்டுள்ளது” என்று இந்த திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்து அமைச்சர் பேசினார்.

எனென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

“இந்த திட்டத்தில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா, நிமோனியா மற்றும் FlPV 3ஆவது தவணை ஆகிய தடுப்பூசிகள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விடுபட்ட, தவணை தவறிய அனைத்து குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோருக்கு செலுத்தப்படும் தடுப்பூசி விவரங்கள் UWIN வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
இதற்காக பிரத்யேகமாக தடுப்பூசி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் அனைத்து 11 வகையான தடுப்பூசிகளும் போதிய அளவில் கை இருப்பில் உள்ளன. குறிப்பாக தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசிகள் 10.85 லட்சம் தவணைகள் கையிருப்பில் உள்ளன” என்று பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.