புதுடெல்லி: மணிப்பூர் கலவரம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள, ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரில் மே மாதம் முதல் நடைபெற்று வரும் வன்முறை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி, மணிப்பூரில் உள்ள சூழ்நிலையை அரசு மிகவும் முதிர்ச்சியுடன் கையாண்டு வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து, மணிப்பூரில் மறுகுடியமர்த்தும் பணிகளை கண்காணிக்க, ஓய்வுபெற்ற நீதிபதிகள் […]
