Do or die: Today is the day to quit white | செய் அல்லது செத்துமடி : இன்று வெள்ளையனே வெளியேறு தினம்

மும்பையில் 1942 ஆக. 8ல் ‘செய் அல்லது செத்துமடி’ என்ற கோஷத்துடன் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தை காந்தியடிகள் துவக்கி வைத்தார். இந்த வாசகம் மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது. காந்தி, நேரு, படேல் உள்ளிட்ட தலைவர்களை ஆங்கிலேயர் சிறை பிடித்தனர். இருப்பினும் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு பயப்படாமல் நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். லட்சக்கணக்கானோர் கைதாகினர். இது ஆங்கிலேயரிடம் இனியும் இந்தியாவை நாம் ஆள முடியாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

இதனால் 1942 ஆக.,8-ம் தேதி மும்பையி்ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் வௌ்ளையனே வெளியேறு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் பேசிய மகாத்மாகாந்தி செய் அல்லது செத்துமடி என்ற கோஷத்துடன் போராட்டத்தை துவக்கி வைத்தார். இவரது இந்த வாசகம் மக்கள் மனதில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியது. அற வழியில் துவங்கிய இப்போராட்டம் வன்முறையாக மாறியது. லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.இது ஆங்கிலேயர் மனதில் இனிமேலும் இந்தியாவை நாம் ஆள முடியாது என உணர வைத்தது. இதன் பின் ஐந்து ஆண்டுகள் கழித்து, இதே ஆகஸ்ட் மாதம் தான் இந்தியா சுதந்திர நாடாக உருவானது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.