Jailer: வெளிநாடுகளில் மாஸ் காட்டும் 'ஜெயிலர்'.. தலைவர் ஆட்டம் ஆரம்பம்.!

ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்காக கடந்த சில நாட்களாகவே ‘ஜெயிலர்’ கொண்டாட்டம் சூடு பிடித்துள்ளது. பொதுவாக ரஜினி படங்களின் வெளியீட்டை திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாடுவார்கள் ரசிகர்கள். அதிலும் தற்போது ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் ரஜினி படம் என்பதால் ‘ஜெயிலர்’ வெளியீட்டை வேறலெவலில் கொண்டாட தயார் ஆகி வருகின்றனர் ரசிகர்கள்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி சுமாரான விமர்சனத்தை பெற்ற அண்ணாத்தவிற்கு பிறகு ஜெயிலரில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘ஜெயிலர்’ படம் உருவாக்கியுவுள்ளது. நாளை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது இந்தப்படம். இதற்காக கடந்த சில நாட்களாகவே புரமோஷன் நிகழ்ச்சிகள் களைகட்டியது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘ஜெயிலர்’ படம் துவங்கும் போது இருந்த எதிர்பார்ப்பினை விட ரிலீஸ் நெருங்க நெருங்க ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு பெருகியுள்ளது. பல மொழிகளை சார்ந்த பிரபலங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளதால், படத்திற்கான பிசினஸ் வேல்யூவும் வேறலெவலில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் உலகம் முழுவதும் சுமார் 4000 அதிகமான திரையரங்குகளில் ‘ஜெயிலர்’ வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் மட்டுமல்லாம வெளிநாடுகளிலும் ‘ஜெயிலர்’ பட ரிலீசை அமோகமாக கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மற்றும் டெக்ஸாஸ் ஆகிய மாகாணங்களில் ஜெயிலர் ரிலீசுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டான்ஸ் நிகழ்ச்சி, அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட பலவற்றை செய்கின்றனர் ரசிகர்கள்.

Mysskin: விஷாலை பொறுக்கின்னு சொன்னது.. முதன்முறையாக மனம் திறந்த மிஷ்கின்.!

அதே போல் பக்ரைன், துபாய் போன்ற நாடுகளிலும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மூன்று திரையரங்குகளில் டிஜே மற்றும் டான்ஸ் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக ரஜினி படங்கள் வெளியாகும் சமயங்களில் வெளிநாடுகளில் உள்ள ரசிகர்கள் பல வகையான புதுமையான கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள்.

அந்த வகையில் ‘ஜெயிலர்’ படத்தின் வெளியீட்டையும் வெளிநாடுகளில் உள்ள ரசிகர்கள் வித்தியாசமான முறையில் கொண்டாடி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், கன்னட திரையுலக பிரபலம் சிவராஜ்குமார், மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப், தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்ட பல மொழிகளை சார்ந்த பிரபலங்கள் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Thalapathy 68: ‘தளபதி 68’ படத்திற்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த ஏகே: எம்புட்டு பாசம்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.