பீஜிங் சீனாவின் தலைநகர் பீஜிங் கில் கனமழை காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டு இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் தென் பகுதி டோக்சுரி சூறாவளி காரணமாகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பீஜிங்கிலும், ஹெபெய், தியான்ஜின் மற்றும் கிழக்கு ஷான்சியிலும் இடைவிடாமல் பெய்த மழையால் அனைத்து இடங்களிலும் நீர் தேங்கியுள்ளது. சீனாவின் முக்கிய ஆறுகளில் தண்ணீர் அபாய அளவை விட தாண்டி ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பீஜிங் துணை மேயர் சியா லின்மாவோ செய்தியாளர்களிடம், ”வெள்ளத்தில் சிக்கி, உயிரிழந்தோர் எண்ணிக்கை […]
