லாகூர்:பாகிஸ்தானில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மியான் சன்னு பகுதியில் இருந்து பக்கார் பகுதிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது பயணிகள் வேன் நேருக்கு நேர் மோதியது. இதில், ஏழு பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 10 பேர் காயம் அடைந்த நிலையில் அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
காயம் அடைந்தவர்களில், ஆறு பேர் நிலைமை கவலைகிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களது விசாரணையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இறந்த நபர்களுக்கு பஞ்சாப் மாகாண தற்காலிக முதல்வர் மோசின் நக்வி இரங்கல் தெரிவித்துள்ளார்.
காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்கவும் சுகாதாரத் துறையினரை அவர் அறிவுறுத்தியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement