Jailer: கலக்கிட்டடா: ஜெயிலர் வெற்றிக்காக நெல்சனுக்கு போன் செய்து பாராட்டிய விஜய்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று ரிலீஸான ஜெயிலர் படம் ஹிட்டாகிவிட்டது.

சொல்லி அடித்த நெல்சன் ரஜினியின் பெரிய Hit
படம் ரிலீஸான அன்றே உலக அளவில் ரூ. 72 கோடி வசூல் செய்திருக்கிறது. 2023ம் ஆண்டில் தமிழ்நாடு மற்றும் உலக அளவில் முதல் நாளே அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்கிற சாதனை படைத்திருக்கிறது ஜெயிலர்.

தலைவர் யாரு, ஓபனிங் கிங் பாரு என ரஜினி ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் நெல்சன் திலீப்குமாருக்கு போன் செய்து பாராட்டியிருக்கிறார் விஜய்.

Jailer Collection: ஒரே நாளில் ரூ. 72 கோடி வசூல்: 2023ன் மெகா ஓபனிங் கிங் ஜெயிலர் தான்

ஜெயிலர் கதையை தலைவரிடம் சொல்லு என விஜய் சார் என்னிடம் கூறினார் என ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார் நெல்சன். இந்நிலையில் நெல்சனை பாராட்டியிருக்கிறார் விஜய்.

முன்னதாக விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார் நெல்சன். அந்த படத்தை பார்த்தவர்கள் வேறு மாதிரி விமர்சனம் செய்தார்கள். இந்நிலையில் ஜெயிலர் படம் பார்ப்பவர்கள் நல்லவிதமாக விமர்சித்து வருகிறார்கள்.

சினிமா ரசிகர்கள் எல்லாம் சூப்பர் நெல்சா என பாராட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் விஜய் தனக்கு போய் செய்து பாராட்டிய சந்தோஷத்தில் இருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.

சூப்பர் ஸ்டார் தலைப்பு தொடர்பாக ட்விட்டரில் ரஜினி, விஜய் ரசிகர்களிடையே மோதலாக உள்ளது. ஜெயிலர் படம் குறித்து விஜய் ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனம் பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் விஜய் பாராட்டிய விஷயம் அறிந்த தளபதியன்ஸோ, அந்த மனுஷனுக்கு யாரையும் தாக்கிப் பேசத் தெரியாதுய்யா, பாராட்டத் தான் தெரியும் என்கிறார்கள்.

இதற்கிடையே நடந்தது நடந்துவிட்டது அதை பற்றி பேசி பலனில்லை. அதனால் பீஸ்ட்டை மறந்துவிட்டு தளபதி விஜய்யை வைத்து நெல்சன் திலீப்குமார் மீண்டும் ஒரு படம் இயக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக தனுஷை வைத்து படம் பண்ணப் போகிறார். ரஜினியை போன்றே தனுஷுக்கும் சூப்பர் ஹிட் படம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jailer: அமெரிக்காவில் விஜய்யின் வாரிசு பட மொத்த வசூலை ஒரே நாளில் முந்திய ஜெயிலர்

இந்நிலையில் அமெரிக்காவில் விஜய்யின் வாரிசு பட வசூலை விட அதிகம் வசூலித்திருக்கிறது ஜெயிலர். வாரிசு படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் முந்திவிட்டது. வாரிசு படம் அமரிக்காவில் 1.14 மில்லியன் டாலர்கள் வசூலித்தது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஜெயிலரோ நேற்று மட்டும் 1.5 மில்லியன் டாலர்கள் வசூல் செய்திருக்கிறது. வார இறுதி நாட்களில் ஜெயிலரின் வசூல் வேட்டை தீவிரமடையும் என்று நம்பப்படுகிறது. சுதந்திர தினம் வரை ஜெயிலரின் வசூல் வேட்டையை யாராலும் தடுக்க முடியாது என்கிறார்கள் ரசிகர்கள்.

ஜெயிலர் படம் பார்க்கும் அனைவரிடமும் பாராட்டு பெறுபவர் இசையமைப்பாளர் அனிருத். என்ன ஒரு பி.ஜி.எம். அனி. ப்ப்பா வாய்ப்பே இல்லை. படத்திற்கு பெரிய பிளஸ்ஸாகிவிட்டது என்கிறார்கள்.

Rajinikanth: விபூதி, குங்குமம், ருத்ராட்ச மாலை, சாந்தமே உருவாக ரஜினி: சூப்பர் ஸ்டாரின் இமயமலை ட்ரிப் வைரல் போட்டோ

ஊர் உலகமெல்லாம் ஜெயிலரை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இமயமலையில் இருக்கிறார் ரஜினிகாந்த். அவர் அங்கு எடுத்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. துணைக்கு யாரும் இல்லாமல் தனியாக சென்றிருக்கிறார் ரஜினி.

வழக்கமாக ஐஸ்வர்யா தான் துணைக்கு செல்வார். லால் சலாம் வேலை இருப்பதால் அவரால் செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.