சென்னை: ஜெயிலர் திரைப்படம் வெளியாகும் முன்பே இமயமலை சென்றுவிட்டார் ரஜினி. ஆனால் அதற்கு முன்பாகவே ஜெயிலர் படத்தின் சிறப்புக் காட்சியை படக்குழுவினருடன் பார்த்து ரசித்தார். இந்நிலையில், தற்போது ஜெயிலர் படத்தை ரசிகர்களும் மக்களும் கொண்டாடி வருகின்றனர். இரு தினங்களாக பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருவதை அடுத்து, இயக்குநர் நெல்சனுக்கு ஸ்பெஷலாக வாழ்த்துக் கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
