‘ஜெயிலர்’ படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இமயமலைக்கு சென்றிருந்தாலும் படத்தின் வெற்றியை கேள்விப்பட்டு நெல்சனுக்கு மெசேஜ் அனுப்பி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் மிகுந்த உற்சாகத்துடன் இன்னும் சில தினங்களில் ரஜினி மீண்டும் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஜெயிலர்’ படம் துவங்கப்பட்ட சமயத்தில் இருந்த எதிர்பார்ப்பினை விட ரிலீஸ் நெருங்க நெருங்க ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பீவர் ஏற்பட்டது. அந்தளவிற்கு தரமான டிரெய்லர், மிரட்டலான படத்தின் போஸ்டர்களை வெளியிட்டிருந்தனர். படக்குழுவினர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வெளியாகியுள்ள ‘ஜெயிலர்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை முழுவதுமாக பூர்த்தி செய்துள்ளது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. முன்னதாக ரஜினி, நெல்சன் இருவருக்குமே கடைசி படங்கள் விமர்சனரீதியாக சறுக்கல்களை சந்தித்தன. அந்த இரண்டு படங்களும் வசூலில் வரவேற்பை பெற்றிருந்தாலும் பலரால் ட்ரோல் செய்யப்பட்டது. இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தில் இருவரும் மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளனர்.
ரஜினியின் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரம் பற்றி சொல்லவே தேவையில்லை. அந்தளவிற்கு திரையரங்குகளில் ரஜினியின் ஒவ்வொரு அசைவையும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள். ஒவ்வொரு சீனிலும் மாஸ், கூஸ்பம்ஸ் என மிரட்டியுள்ளார் ரஜினி. இந்நிலையில் ‘ஜெயிலர்’ ரிலீசுக்கு முன்பாக பேட்டி எதுவும் கொடுக்காமல் இருந்த இயக்குனர் நெல்சன், படத்தின் ரிலீசுக்கு பின்பு பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
Mari Selvaraj: நாங்குநேரி கொடூர சம்பவம்: ஜி.வி. பிரகாஷ், மாரி செல்வராஜ் விளாசல்.!
அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நெல்சன் திலீப்குமார், ‘அண்ணாமலை படத்தில் கதவு ஓபன் ஆகும் போது கோர்ட் சூட் போட்டு ரஜினி சார் நிற்குற மாதிரி ஒரு ஷாட் இருக்கும். என்னோட பேவரைட் ரஜினி ஷாட் அது தான். அதுக்கப்புறம் பாட்ஷா படம். எனக்கு இந்த ரெண்டு படங்களும் ரொம்ப பிடிக்கும். எனக்கு அண்ணாமலை, பாட்ஷா படத்துல அவரை பார்த்து எப்படி பிடிச்சதோ, அதுல பாதியாவது ஜெயிலர்ல உருவாக்கணும் நினைச்சேன்.
அதுதான் படத்தோட பேஸிக்கான ஐடியா. படத்துல பல இடத்துல கூஸ்பம்ஸ் இருந்துச்சுன்னு நிறைய பேர் சொன்னாங்க என தெரிவித்துள்ளார் நெல்சன். ‘ஜெயிலர்’ டிரெய்லர் வெளியான போதே பாட்ஷா பாணியில் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். படத்திலும் நிறைய மொமண்ட்ஸ் அதே மாதிரி கொடுத்து பயங்கரம் காட்டியிருந்தார் நெல்சன். இந்நிலையில் அதே பாட்ஷா, அண்ணாமலை படங்கள் தனக்கு பேவரைட் என நெல்சன் தெரிவித்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Jailer: ஜெயிலருக்கு கிடைத்து வரும் பிரம்மாண்ட வரவேற்பு: நெல்சனுக்கு மெசேஜ் அனுப்பிய ரஜினி.!