Jailer: ஜெயிலர் படத்தில் அவரையும் நடிக்க வைக்கலாம் என இருந்தேன்..ஆனால்..உண்மையை உடைத்த நெல்சன்..!

ரஜினியின் நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு திரையில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்று வருகின்றது. நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவான இப்படம் ரஜினிக்கு மட்டுமல்லாமல் நெல்சனுக்கும் ஒரு கம்பாக் படமாக அமைந்துள்ளது.

ரஜினிக்கும் சரி, நெல்சனுக்கும் சரி கடைசி படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே இருவரும் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பும் கட்டாயத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான ஜெயிலர் திரைப்படம் அனைவரிடமும் பாசிட்டிவான விமர்சனங்களையே பெற்று வருகின்றது.

ஜெயிலர் வெற்றி

பல படங்களுக்கு பிறகு மீண்டும் பழைய ரஜினியை ஜெயிலர் படத்தின் மூலம் பார்த்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் நெல்சன் இப்படத்தின் மூலம் தான் யார் என நிரூபித்துவிட்டார் என அவரையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.இதையடுத்து இப்படத்தில் சர்ப்ரைஸான பல விஷயங்கள் இடம்பெற்றது.

Jailer FDFS: ரஜினியின் நம்பிக்கையை காப்பாற்றினாரா நெல்சன் ? ரசிகர்கள் சொல்வது என்ன ?

குறிப்பாக மோகன்லால் மற்றும் ஷிவ்ராஜ்குமார் ஆகியோரின் கெஸ்ட் ரோல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால் மற்றும் ஷிவ்ராஜ்குமார் ஆகியோர் மாஸ் காட்டி விட்டனர். அந்த காட்சிக்கு திரையரங்கில் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடினர்.

மேலும் நெல்சனுக்கு மோகன்லால் மற்றும் ஷிவ்ராஜ்குமார் இருவரும் போன் செய்து வரவேற்பு சிறப்பாக இருப்பதாக கூறியதாக நெல்சன் தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த நெல்சன், இப்படத்தில் தெலுங்கு திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க முயற்சித்ததாகவும், ஆனால் அது நடக்காமல் போய்விட்டதாகவும் தெரிவித்தார்.

மிஸ்ஸான பாலகிருஷ்ணா

மேலும் அவர் கூறியதாவது, ஜெயிலர் படத்தில் ஒரு பவர்புல்லான ரோலில் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் ஏதோ சில காரணங்களால் அது மிஸ்ஸாகிவிட்டது. இருந்தாலும் எதிர்வரும் காலங்களில் நான் கண்டிப்பாக அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என நம்புவதாக நெல்சன் தெரிவித்தார்.

https://news.google.com/publications/CAAqBwgKMPOGqQsw5ZHBAw?hl=ta&gl=IN&ceid=IN%3Ata

இந்நிலையில் ரிலீசுக்கு பிறகு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வரும் நெல்சன் ஜெயிலர் பற்றியும், வெற்றி தோல்விகள் பற்றியும் பேசி வருகின்றார். அவர் மிகப்பெரிய வெற்றியை அடைந்தாலும் சில பின்னடைவை சந்தித்தாலும் எப்போதும் ஒரே மாதிரி தான் இருப்பாராம். வெற்றியோ தோல்வியோ அனைத்தையும் சரிசமமாக பார்த்து வருவதாக கூறியுள்ளார் நெல்சன். இதையடுத்து ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று உலகளவில் வசூல் சாதனை செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.