புதுடில்லி:டில்லி பல்கலையின் கீழ் செயல்படும் கல்லுாரிகளில் 2023 – 20-24ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் இளங்கலை படிப்புகளில் இரண்டாம் சுற்றில் 19,000 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டில்லி பல்கலையின் கீழ் செயல்படும் கல்லுாரிகளில் இளங்கலைப் படிப்புகளுக்கு 71,000 இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால், 85,853 ஆக அதிகரித்தது.
முதல் சுற்றில், 62,000 மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடப்பிரிவை உறுதி செய்து, கட்டணம் செலுத்தினர். ஆனால், 34,174 பேர், தங்கள் பாடப்பிரிவை மாற்றிக் கொள்ள விண்ணப்பித்து தேர்வு பெற்றுள்ளனர்.
அதேபோல, இரண்டாம் சுற்று சேர்க்கையில், 19,038 பேருக்கு பாடப் பிரிவுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில், 10,104 பேர் மேம்படுத்தப்பட்ட பாடப்பிரிவுக்கு தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர்.
முதல் சுற்றில் 17,561 பேர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை முடக்கி வைத்துள்ளனர். முதல் கட்ட ஒதுக்கீடு பெற்ற, 62,000 பேரில், 53 சதவீதம் பெண்கள்.
கடந்த 7ம் தேதி முதல் சுற்று ஒதுக்கீடு முடிந்த பிறகு காலி இடங்களின் பட்டியலை பல்கலை வெளியிட்டது.
வடக்கு வளாகத்தில் உள்ள கல்லுாரிகளில் ஒரு சில இடங்கள் மட்டுமே காலியாக இருப்பதாக பட்டியல் காட்டியது. தெற்கு வளாகத்தில் உள்ள சில கல்லூரிகளில் சமஸ்கிருதம் மற்றும் வேதியியல், இயற்பியல் மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட அறிவியல் படிப்புகளில் காலியிடங்கள் உள்ளன.
மாணவர்கள் நாளை வரை தங்கள் ஒதுக்கீட்டை ஏற்கலாம். வரும் 15ம் தேதிக்குள் ஆன்-லைனில் பணம் செலுத்த வேண்டும்; 16ம் தேதி வகுப்புகள் துவங்குகின்றன.
மூன்றாவது சுற்று மாணவர் சேர்க்கை, 17 – 26 வரை நடக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்